சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத் தில் 2022_-2023 ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கலந் தாய்வு நடைபெற்றது. 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் என மொத்தம் 565 இடங்கள் உள்ளன. அதில் எம்.பி.பி.எஸ் 459, பி.டி.எஸ்க்கு 106 இடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 பல் மருத்துவக் கல்லூரி என 58 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

