Prøve GULL - Gratis
"தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி.."- மக்கள் சந்திப்பில் விஜய் பரபரப்பு பேச்சு
Maalai Express
|November 23, 2025
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
-
இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.
காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்களை நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சீபுரம் மாவட்டம்தான்.
Denne historien er fra November 23, 2025-utgaven av Maalai Express.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Maalai Express
Maalai Express
விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
கடந்த செப்.
1 min
January 10, 2026
Maalai Express
19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு
அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
1 min
January 10, 2026
Maalai Express
தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
January 07, 2026
Maalai Express
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
1 min
January 06, 2026
Maalai Express
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
1 min
January 06, 2026
Maalai Express
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20ந்தேதி தொடங்குகிறது.
1 min
January 06, 2026
Maalai Express
தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.
1 min
January 05, 2026
Maalai Express
கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு
நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1 min
January 05, 2026
Maalai Express
மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.
1 min
January 05, 2026
Maalai Express
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை
புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
1 min
January 03, 2026
Listen
Translate
Change font size
