Facebook Pixel கவலை தரும் கல்வியின் தரம் | Dinamani Vellore - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Vellore

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால்களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர். இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவரவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Vellore

Dinamani Vellore

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Vellore

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆஸி. யுடனான ஒருநாள் தொடர்: வரலாறு படைத்தது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Vellore

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Translate

Share

-
+

Change font size