Prøve GULL - Gratis
கூட்டம் : குழப்பம் : மரணம்
Dinamani Tiruchy
|June 30, 2025
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரக்குடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். இதற்கு நிர்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலர்களின் திறமையின்மையும் காரணங்கள்.
ஒருவர் விபத்தில் மரணிக்கலாம், கொலையுண்டு மரணிக்கலாம், விஷ ஜந்துக்கள் தீண்டி மரணிக்கலாம்-இவ்வாறு காரணங்கள் மாறுபட்டாலும் மரணம் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், ஒரு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே தள்ளப்பட்டு, சிக்குண்டு, மிதிபட்டு, அடிபட்டு, மூச்சுத்திணறி மரணிப்பது எவ்வளவு கொடுமை.
மனிதனை எருமை மாட்டால் மிதிக்கவிட்டு கொல்வதை கருட புராணத்தில் இருந்து எடுத்து 'அந்நியன்' படத்தின் இயக்குநர் சங்கர் 'அண்டகூபம்' என்று விளக்குகிறார். நம்மை ஒருவர் இடித்தோ, மிதித்தோ செல்லும்போது எருமை மாடு என்று நாம் திட்டும் பழக்கம் கருட புராணத்தின் நீட்சிதானோ என்னவோ...
'கோழி மிதித்து குஞ்சு சாகாது' என்ற பழமொழி கூட்டத்தில் மிதிபட்டு சாகும் மனிதனுக்குப் பொருந்தாது!
இதுபோன்ற மரணங்களின் இடங்கள் மாறுபட்டாலும், அவற்றுக்கான அடிப்படை காரணங்கள் ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் காலம்காலமாய் கேளிக்கை இடங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பணக்கார இஸ்லாமிய பெரியவர் திண்டுகல்லில் பக்ரீத்தின்போது ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்க முற்பட்டார். அங்கு கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சில ஆண்களும், பெண்களும் இறந்தனர். நல்லது செய்ய நினைத்து சோகத்தில் முடிந்த அந்த நிகழ்வு குறித்து அந்தப் பெரியவர் கண்ணீர் பேட்டி அளித்தார்.
கடந்த 1990-இல் மெக்கா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 1,426 பேர் உயிரிழந்தனர். 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஹஜ் பயணத்தின்போது மதினா கூட்ட நெரிசலில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
Denne historien er fra June 30, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tiruchy
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruchy
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
