Prøve GULL - Gratis
மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்
Dinamani Thanjavur
|September 12, 2025
கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
-
துபை, செப். 11:
இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், தங்களது முக்கிய தலைவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. கடந்தகால ஹமாஸ் தலைவர்கள் படுகொலைகளின்போதும் அந்த அமைப்பு மௌனமாகவே இருந்து வந்துள்ளது.
ஒருவேளை இந்தத் தாக்குதல் வெற்றி பெற்று, ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு அது முடிவாக இருக்காது. இரண்டு ஆண்டுகால போரைத் தாக்குப்பிடித்து, காஸாவில் இன்னும் சுமார் 20 பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது ஹமாஸ்.
காஸா சிட்டியை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தொடங்கியுள்ள புதிய தாக்குதல், 2023 அக்டோபர் 7 முதல் நடந்துவரும் போரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கும் 'முழுமையான வெற்றியை' கொடுக்குமா என்பது சந்தேகமே. இதற்கு ஒரு காரணம், மக்களிடையே இரண்டறக் கலந்து, பிறகு மீண்டும் எழும் ஹமாஸின் திறன். ஹமாஸை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதை முழுமையாக ஒழித்து, மீண்டும் உருவாகாமல் தடுப்பது என்ற இஸ்ரேலின் இலக்கு, முடிவில்லாத போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனர்.
பேரிழப்புகளைத் தாங்கிய ஹமாஸ்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றில் ஹமாஸின் ஏறத்தாழ அனைத்து மூத்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதன் நீண்ட தூர ஏவுகணை கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அதன் அரசுக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஈரான் மற்றும் அதன் பிற பிராந்திய கூட்டாளிகளும் கடும் பின்னடைவில் உள்ளன.
இத்தனைக்கு இடையிலும் ஹமாஸிடம் இன்னமும் ஆயிரக்கணக்கான படையினர் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கணித்துள்ளது. இதில் போரின்போது ஹமாஸில் இணைந்தவர்களும் அடங்குவர்.
Denne historien er fra September 12, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Thanjavur
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Thanjavur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Thanjavur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Translate
Change font size

