Prøve GULL - Gratis

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

Dinamani Salem

|

November 20, 2025

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

- அருணன் கபிலன்

திருக்குறள் நெறிகளை தம்வாழ்வில் பின்பற்றி உயர்ந்தோர் ஆல்பர்ட் சுவைட் சர், லியோ டால்ஸ்டாய், லாசரசு, சார்லஸ் கோவர், விண்டர்னிட்சு, ஜி.யு. போப் ஆகி யோர். அவருள் முதன்மையராகக் குறிப் பிடத் தகுந்தவர் மகாத்மா காந்தி. அவ ருடைய வாழ்வும் கொள்கைகளும் எக் காலத்துக்கும் ஏற்றவாறு அவர் பெயரி லேயே காந்தியம் என்னும் மரபாயிற்று. அது வள்ளுவத்தின் வேரிலிருந்து கிளைத் ததாகும். வள்ளுவம் உலகப் பொதுமறை ஆனதைப் போலவே காந்தியமும் உலகக் கொள்கையாக நிலைபெற்றுவிட்டது.

சர்வாதிகாரத்தின் கொடூரப் பிடி யிலிருந்து அடித்தட்டு மக்களை மீட்டுக் கொணரும் சமூகப் போராட்ட முறையாக மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் தனக் குள்ளே கிளைத்திருக்கிற அறியாமைகளி லிருந்தும், மடமைகளிலிருந்தும் தானே விடுதலை அடைய முயல்கின்ற அகப் போராட்ட முறையாக - அறப்போ ராட்ட முறையாகக் காந்தியம் அமைந்தது. இதுவும் வள்ளுவத்தின் வெளிப்பாடே.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கூடவே இணைந்து வந்த கொடுங்கோன் மையும், அடக்குமுறையும் அறியாமையும் முற்றிலும் வில(க்)கிக் கொள்ளக் கிடைத்த பெருநெறியாகக் காந்தியம் தோன்றியது.

அறிவியல் வான்நோக்கி நீண்டு கொண் டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி மரபிய லிலும் ஆன்மிகவியலிலும் ஆழ்ந்து கொண் டிருந்தார். உலகம் கணினியைக் கருவியாக்க முயன்று கொண்டிருந்த காலத்தில் இவர் கைராட்டையைக் கொண்டு புரட்சி செய் தார். அடிப்படையில் திருக்குறள் தான் உள் ளிருள் நீக்கும் விளக்காகத் தோன்றி மோகன் தாஸை மகாத்மா ஆக்கியது.

வாழ்வின் பொருள் தெரியாமல் அலைந்த மோகன்தாஸுக்கு நல்ல வழிகாட்டு நூலாக அமைந்தது வள்ளுவம். இயல்பாகவே வள்ளுவத்தின் கொள்கை கள் சிலவற்றோடு அவர் ஒன்றியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை, அறவழிநிற்றல், இல்வாழ்வு, வாழ்க்கைத் துணைந லம், அன்பு, செய்நன்றிப் பாங்கு, நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை போன்ற குணங்கள் இயல்பாக இருந்தபோதும் கூடவே தீவினையச்சம், கள்ளாமை, புலால் மறுத்தல், வாய்மை முதலியவற்றைப் பின்பற்ற மோகன்தாஸ் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.

நாகரிகத்தின் பெயரால் மேற் கத்தியம் இந்திய மரபுகளைப் பழைமை என இகழ்ந்த வேளை யில் எது சரி என்பதைத் தேர்ந்து கொள்ள இயலாமல் தவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் நேரும் சகல வாழ்வியல் அவலங்களும் சாதாரண மனிதனாக இருந்த மோகன்தாஸுக்கும் நேர்ந் தன.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

மெளனம் பலவீனம் அல்ல!

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Salem

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Salem

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

time to read

3 mins

November 20, 2025

Dinamani Salem

Dinamani Salem

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை

இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

time to read

1 min

November 20, 2025

Dinamani Salem

இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்

'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Salem

கியா இந்தியா விற்பனை 30% உயர்வு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் இந்தியாவில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Salem

பங்குச் சந்தைகளில் மீண்டும் எழுச்சி

உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், இறுதியில் எழுச்சியுடன் முடிவடைந்தது. இதன் மூலம், தொடர்ச்சியாக 3-ஆவது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகள் நேர்மறையாக முடிந்தன.

time to read

1 min

November 20, 2025

Dinamani Salem

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Salem

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Salem

மயக்கும் மாயத் திரை!

நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.

time to read

3 mins

November 19, 2025

Listen

Translate

Share

-
+

Change font size