Prøve GULL - Gratis

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

Dinamani Puducherry

|

July 02, 2025

ஜாதியப் பிரிவுகள் நீரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவர்கள் பிறந்த ஜாதிகளை வைத்து இடஒதுக்கீடு செய்வது சமூக அநீதியாகுமே தவிர, சமூக நீதியாகுமா?

ஜாதியம் ஒரு விநோதமான கட்டமைப்பு. இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இத்தகைய ஜாதிய கட்டமைப்பு இவ்வளவு இறுக்கமாக இல்லை. ஒருவர் தனக்கு விருப்பமான மதத்தில் சேரலாம். அதிலிருந்து விலகவும் செய்யலாம். ஆனால், அவரே தனக்கு விருப்பமான ஜாதியில் சேரவும் முடியாது. அந்த ஜாதியிலிருந்து விலகவும் முடியாது.

இந்தியாவில் ஒருவர் ஏதோ ஒரு ஜாதியில்தான் பிறக்கிறார் என்பது உண்மை. இறக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகுக் கூட அவர் ஜாதியால்தான் அடையாளம் காணப்படுகிறார். ஜாதியம் என்பது உயர்ஜாதி ஹிந்துக்களின் ரத்தத்தில் ஊறிக்கலந்துள்ளது போலவே, கீழ் ஜாதியினரை தீண்டத்தகாதவர் என்று அவர்கள் கருதுகிற மனோபாவமும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துள்ளதையும் மறுக்க இயலாது.

ஜாதிவிட்டு வேறுஜாதியில் காதலித்தால் அவர்களை அவர்களின் பெற்றோர்களே கொலை செய்துவிடுகிற அளவுக்குப் பல வழக்குகள் பல மாநிலங்களில் இன்றைக்கும் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள்கூட, அந்த மதத்தில் அவர்களுக்கான தனியான தேவாலயங்களில்தான் வழிபாடு நடத்துகிறார்கள்.

தமிழக நாகரிகத்தின் பொற்காலம் எனப் பேசப்படுகிற சங்ககாலத்தில்கூட கூல வாணிகன், அறுவை வாணிகன், கணியன் என்று ஜாதிகள் இருந்திருக்கின்றன. அவை உயர்வு, தாழ்வு ஜாதிகளாக இல்லை என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான பதிவுகள் இல்லை. மேல்குலத்தோர், கீழ்குலத்தோர் என்று சொல்லப்படுவதால், ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை.

ஜாதியத்தை ஒழிக்க முடியாத நிலையில் தான் முன்னேறிய ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், பட்டியலினப் பழங்குடி ஜாதியினர் என மூன்றாக ஜாதிகளை வகுத்துள்ளோம். முன்னேறிய ஜாதிகளிலுள்ள வசதியானவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளைத் தங்கள் சுய வசதிகளினாலேயே பெற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும், பட்டியலின-தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடஒதுக்கீடுகள் தரப்பட்டு, அதன்மூலம் அவர்கள் கைதூக்கிவிடப்பட்டு வருகின்றனர்.

அப்படி வந்த இடஒதுக்கீட்டின் வரலாறு தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறாண்டுப் பழைமையானது.

FLERE HISTORIER FRA Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியில் பங்கு சாத்தியம்

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size