Prøve GULL - Gratis

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

Dinamani Nagapattinam

|

June 20, 2025

பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

அண்மையில் குடும்பத்தினருடன் வெளிமாவட்டத்துக்கு சென்றபோது இணைய இடர்ப்பாடு ஏற்பட்டு 'கூகுள் மேப்' கைவிட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தி வழி கேட்டோம். ஒரு நபர் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசி, தீர்மானமாக ஒரு திசையை சுட்டி வழி காட்டினார். அவர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மாற்றுப் பாதையில் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதன்பிறகு, மற்றொரு நபரிடம் வழிகேட்டோம். முதல் நபர் சொன்ன பாதைக்கு நேர்மாறான எதிர்பாதையில் செல்லுமாறு அவர் வழிகாட்டினார். முதல் நபர் அத்தனை தீர்மானமாகச் சொன்னாரே, தற்போது யார் காட்டிய திசையில் செல்வது என்று உள்ளுக்குள் பெரும் குழப்பம். மூன்றாவது நபர் ஒருவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று அவரிடம் விசாரித்ததில் இரண்டாம் நபர் சொன்ன பாதையை அவர் வழிமொழிந்து அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

முதல் நபர் தவறாக வழிகாட்டியதால் நேரம் வீணாகிவிட்டதே என்று கவலை கொண்டாலும் தனக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரியாத ஒரு தகவலை, அவர் ஏன் அத்தனை தீர்மானமாக இருந்து வழி சொன்னார் என்ற கேள்வி நீண்ட நேரம் மனதைக் குடைந்தது.

ஒரு தவறான தகவல் எத்தனை வகையான அசௌகர்யங்களை ஏற்படுத்திவிடுகின்றன! ஒரு மனிதர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் பகிர்ந்தவை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம் மனம் நம்பியதே பொய்த்துப் போகும் சூழ்நிலையில், யார் சொன்னது, எவர் சொன்னது என்று சிறிதளவும் தெரியாத ஒரு தகவலை எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வலிமையாகத் தோன்றியது.

சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் பெரும் பங்கு வகித்துவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மைத் தொடர்புகொள்ள, தகவல்களைப் பகிர, செய்திகளைத் தெரிந்து கொள்ள எனப் பல்வேறு தேவைகளை அவை பூர்த்திசெய்கின்றன; எனினும், ஏராளமான தவறான தகவல்களும் கட்டுக்கதை களான செய்திகளும் வலம்வருகின்றன. சுமார் 70 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்கு வந்துசேரும் ஒரு தகவல் உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்கின்றனர். அதனால் சில நேரங்களில் நம் மீது இருக்கும் நம்பகத்தன்மைகூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. நாம் இப்படி பொதுவெளியில் பகிரும் நம்பகமற்ற தகவல்களினால் மறைமுகமாக சில பிரச்னைகள் முளைகின்றன என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திங்கள்கிழமை (நவ.17) நேரில் சந்தித்தார்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

time to read

2 mins

November 18, 2025

Dinamani Nagapattinam

உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

6-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்

அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், நிறுவனங்களின் வலுவான காலாண்டு செயல்திறன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஆறாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமையும் முன்னேற்றம் கண்டன.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

மாற்றம் தந்த வெற்றி!

கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் கபடிபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.

time to read

2 mins

November 18, 2025

Dinamani Nagapattinam

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

இந்திய ஏற்றுமதி 12% சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

எம்&எம் விற்பனை 26% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

உணவே மருந்து!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).

time to read

2 mins

November 17, 2025

Translate

Share

-
+

Change font size