Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!

Dinamani Coimbatore

|

March 13, 2025

குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.

- முன்னாள் அமைச்சர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மூன்று முறை 1951, 1961, 1971 ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.

மேற்கூறிய கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை முறையே அன்றைய காலகட்டத்தில் 36 கோடி, 43.9 கோடி மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 1952-இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன.

அடுத்து நடந்த கணக்கெடுப்புகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என உயர்ந்தது. அடுத்து நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆகவேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அப்படி எந்தப் பிரச்னையும் எழாது என்று பாஜக சொல்கிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக மக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற மறுசீரமைப்பின் மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதியைத் தர முடியாது என்று கூறுவது அடக்குமுறை. கூட்டாட்சிக்கு எதிரானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக இயற்றி அதன் மூலம் பெரும் பயனும் அடைந்திருக்கிறது.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம்

தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்

தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி

time to read

1 mins

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இந்திய வாக்காளர்களின் முதல் தேர்வு பாஜக

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.

time to read

2 mins

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சபலென்கா, அல்கராஸ் வெற்றித் தொடக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ஸ்வெரேவ் வெற்றியுடன் தொடங்கினர்.

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

உ.பி.: அனுமதியின்றி காலி வீட்டில் தொழுகை நடத்திய 12 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வடகிழக்கு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ்!

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகையில் விருந்தினர்களுக்கு வழங்கும் 'தேநீர் விருந்து' நிகழ்வுக்கான அழைப்பிதழ் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான இளைஞர்: ரூ.1.62 கோடி இழப்பீடு

2024, ஜூலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து 53 சதவீதம் மாற்றுத்திறனாளியான 21 வயது இளைஞருக்கு தில்லி மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் ரூ.

time to read

1 min

January 19, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சிரியா: குர்து ஆயுதக் குழுவிடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு

சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குர்து இனத்தவர்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினர் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.

time to read

1 min

January 19, 2026

Translate

Share

-
+

Change font size