Prøve GULL - Gratis
மெட்ரோ-தேவை மறுபரிசீலனை!
Dinamani Chennai
|November 26, 2025
தமிழ்நாட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரிய திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. திமுக அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க் கட்சி அதிமுக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் உரிமை என்கிற போது ஓரணியில் நின்று தமிழர் உரிமை காப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.
எத்தனை பிரச்னைகள் எழுந்தாலும் தமிழர் உரிமை காப்பதில் அக்கறை செலுத்துகிற எவரையும் தமிழ்நாடும், தமிழக மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்த வகையில், மத்திய அரசு இதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்தாமல் தமிழ்ச்சங்கம் வளர்த்த பழம்பெருமை வாய்ந்த மதுரையிலும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழருடைய விருப்பம்.
20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட காரணத்தால் மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசின் விதிகள் தெரிந்தும்கூட இந்த நகரங்களின் சரியான மக்கள்தொகையையும், பிற விவரங்களையும் திமுக அரசு முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது.
மாநிலத்தில் வேகமாக வளர்ந்துவரும் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.
20 லட்சத்துக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, பாட்னா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதன்மூலம் மத்திய அரசு கோவையையும், மதுரையையும் சிறப்பு நிலையாகக் கருதி பரிசீலிக்க வேண்டும். சென்னை மெட்ரோ திட்டம் 1-இல் 55 கி.மீ. தொலைவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சராசரியாக 4 லட்சம் பேர் பயணித்துள்ள நிலையில், கோவையில் 34 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் தடத்தில் 5.9 லட்சம் பேர் தினமும் பயணிப்பார்கள் என்று கூறுவது அதீத மதிப்பீடாக இருப்பதாக மத்திய அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
உக்கடம் - ஹோப் கல்லூரி, கோவை சந்திப்பு-ராமகிருஷ்ணா மில்ஸ் உள்ளிட்ட தடங்களின் விவரங்களைக் குறிப்பிடும் அந்தக் கடிதம் 79 சதவீத சாலைகள், 20 மீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. சில இடங்களில் 15 மீட்டருக்கும் குறைவாக உள்ளன. எனவே, உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமாகாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra November 26, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி
வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி
முதல்வர் ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையொப்பமிட்டார்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்
எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர்
1 min
May 21, 2026
Dinamani Chennai
இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு: பிரதமர் மோடி-மெலோனி உறுதி
இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
அஷ்மிதா, மாளவிகா வெற்றி
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், தேவிகா சிஹக் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்
குஜராத்துடன் மோதல்
1 min
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Chennai
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகள் 89% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாண வியர் 89 சதவீதம் பேர் தேர்ச்சிய டைந்துள்ளனர். இது கடந்த ஆண் டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.
1 mins
May 21, 2026
Dinamani Chennai
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

