Facebook Pixel கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழப்பு | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழப்பு

Dinamani Chennai

|

September 28, 2025

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழப்பு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் தலைவர்கள் விஜய் பேசியபோது திரண்டிருந்த கூட்டம்.

மேலும் 82 பேர் காயமடைந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு கரூருக்கு சனிக்கிழமை மாலை வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விஜய் இரவு 7 மணிக்கு பேசத் தொடங்கினார். அப்போது, விஜய்யை காண முண்டியடித்தபடி கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால், தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. சிறுவர், சிறுமிகள், இளம் பெண்கள் பலரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீது பலரும் சாய்ந்து விழுந்ததால், ஒவ்வொருவராக மயங்கி விழத் தொடங்கினர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பலரும் மயங்கினர்.

அப்போது கூட்டத்திலிருந்த சில பெண்கள் தங்களது குழந்தைகள் மயங்கிவிட்டதாக கூக்குரல் எழுப்பத் தொடங்கினர். இருப்பினும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாலும், தொண்டர்கள் கத்தியபடியே இருந்ததாலும் உடனடியாக மயங்கியவர்களுக்கு உதவ எவராலும் முடியவில்லை.

தங்களது கால்களுக்கு இடையே மயங்கிக் கிடந்தவர்களை அருகிலிருந்தோர் மீட்டு பக்கத்திலிருந்த வீடுகளில் இருந்து தண்ணீர் பெற்று முதலுதவி அளித்தனர். இருப்பினும் சிறார்கள், இளம் பெண்கள் பலர் மயங்கிய நிலையிலேயே கிடந்தனர். அவர்களை போலீஸாரும், தவெக தொண்டர்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தூக்கிச் சென்றனர்.

கூட்டத்தை கலைக்க போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். பின்னர், மயக்கமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கலவர பூமியானது: முதலில், பிரசார இடத்துக்கு அருகே வேலுச்சாமிபுரம், வையாபுரி, ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்த 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். பின்னர், கரூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்

தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா - அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

பியூஷ் கோயல் - ஜேமிஸன் க்ரீயர் பங்கேற்பு

time to read

1 mins

June 24, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Chennai

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

time to read

1 min

June 24, 2026

Translate

Share

-
+

Change font size