Prøve GULL - Gratis
அன்புள்ள ஆசிரியருக்கு...
Dinamani Chennai
|September 26, 2025
சமுதாயத்தின் ஆணிவேர்பெண் கல்வி என்பது சமுதாய பொது நலம் பெருக உன்னத வழி யாகும் ('பெண் கல்வி: நாட்டின் முதலீடு!'-துணைக் கட்டுரை-வழக்குரைஞர் சங்கீதா, 18.09.25). மகாகவி பாரதியார் பெண் கல்வியின் அவசியத்தை, அடிமைத்தனத்தின் அவலத்தை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். பெரியார் ஈ.வெ. ரா. பெண் கல்வியின் அவசியத்தை சென்ற இடமெல்லாம் பதிவு செய்தார். பெண் என்பவள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பொருள் அல்ல; அவள் சமுதாயத்தின் ஆணிவேர். மனித குலம் தேர் என்றால், அது சாயாமல் காக்கும் அச்சாணி போன்ற அமைப்பு கொண்டவள் பெண். பெண்ணின் பெருமை பேச எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், அவர்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி எனும் கண்ணைத் திறக்க எல்லோரும் முன்வர வேண்டும். ப. நரசிம்மன், தருமபுரி.
-
வேடிக்கை பார்க்கும் உலகம்
காஸாவின் மீது இஸ்ரேல் வரம்பற்ற தாக்குதல் நடத்தி வருகிறது ('இப்படியே தொடர்ந்தால் எப்படி?' -ஆசிரியர் உரை, 19.09.25). பிஞ்சுக் குழந்தைகள் உணவுக்காக கையேந்தும் இந்த அவலத்தைப் பார்க்கும் போது நமக்கு கண்ணீர் கசிகிறது. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்யும் வஞ்சகத்தை உலகம் இன்னமும் வேடிக்கை பார்ப்பது அதிகபட்ச அநியாயம். ஐ.நா. அமைப்புகளின் அறிக்கைகள் மீதான நம்பிக்கை மடிந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. அமெரிக்காவின் தயவில்தான் ஐ.நா. சபை இயங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வார்த்தை ஜாலங்களைத் தவிர்த்து உண்மை உயிர்வாழ உலகம் உருப்படியாய் ஏதாவது செய்தாக வேண்டும். அதையும் தாமதமின்றி செய்ய வேண்டும். அப்போதாவது தீர்வு கிடைக்குமா? மோ. சேவியர், வள்ளியூர்.Denne historien er fra September 26, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு
பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை
சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு
1 min
June 24, 2026
Translate
Change font size
