Prøve GULL - Gratis
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
Nakkheeran
|November 27-29, 2024
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது."
-
'ஆமாம்பா, அ.தி.மு.க. நடத்திய ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் ரஜினி உரை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே?"
'உண்மைதாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன் தி.மு.க. நடத்திய அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்ட போதே, நாமும் ஒரு விழாவை நடத்தி, அதுக்கு ரஜினியை அழைக்கணும்னு எடப்பாடி தீர்மானிச்சிட்டாராம். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை திட்டமிட்டபோதே, நடத்தத் ரஜினிக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாராம். ஆனால் ரஜினி அப்போதே, 'என்னால் விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. வர இயலாத சூழலில், நிச்சயம் காணொலிக் காட்சி வழியாக கலந்துகொள்வேன்'னு எடப்பாடிக்கு உறுதி கொடுத்தாராம். அதன்படி வானகரத்தில் 24ஆம் தேதி அ.தி.மு.க. நடத்திய ஜானகி நூற்றாண்டு விழாவில், காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார் ரஜினி. அப்போது, ஜானகி அம்மாளைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்ட அவர், இரட்டை இலைதான் அ.தி.மு.க.வின் அஸ்திரம். தேர்தல் ஆணையத்தால் அது முடக்கப்பட்ட போது அதனை மீட்டு ஜெயலலிதா விடம் ஒப்படைத்தவர் ஜானகி அம்மாளனு பழைய சம்பவத்தை நினைவு படுத்தினார்."
"தான் அரசியலுக்கு வராதது பற்றியும் அதில் ரஜினி பேசியிருக்கிறாரே?"
ஆமாங்க தலைவரே, ரொம்பவும் அதை நகைச்சுவையாக விவரித்த ரஜினி, 'நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் நிறைய பேர் ஆலோசனை சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டிருந்தா அவ்ளோதான். நிம்மதி, பணம்னு எல்லாத்தையும் இழந்திருக்கணும்'னு சொல்லி, எல்லோரையும் கலகலப்பில் ஆழ்த்தியிருக்கார். இந்த விழாவில் ஜெயலலிதாவோடு திரைப்படத்தில் நடித்த சீனியர் நடிகைகள் சிலரையும் அழைத்து, கௌரவிச்சிருக்காங்க. அதேபோல் இந்த விழாவில் பேசிய எடப்பாடி, 'அ.தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் வெற்றிபெறும். அதேபோல இன்று அ.தி.மு.க.வை எவர் அழிக்க நினைத்தாலும் அது நடக்காது' என்று, கட்சியில் இருக்கும் தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, தனக்கு எதிராகக் கொடி பிடித்து வரும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர் இந்த விழாவில் அவர் மைக் பிடிக்க விடவில்லை. இது அவர்களை மேலும் டென்சனாக்கியிருக்கிறதாம்."
Denne historien er fra November 27-29, 2024-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
கூட்டணி சலசலப்பு! காங்கிரஸ் திருவிளையாடல்!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் த.
1 mins
December 27-30, 2025
Nakkheeran
தி.மு.க. தனித்து களமிறங்குமா?
உசிலம்பட்டி திகுதிகு...!
2 mins
December 27-30, 2025
Nakkheeran
மாவலி பதில்கள்
சி. கார்த்திகேயன், சாத்தூர் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளைச் சரிசெய்யும் பணி இன்னும் நிறைய இருப்பதாக பிரதமர் மோடி கூறுவதுபற்றி?
1 mins
December 27-30, 2025
Nakkheeran
அணிதிரண்ட இளைஞர்கள்!
களைகட்டிய உதயநிதி பிறந்தநாள் விழா!
1 min
December 27-30, 2025
Nakkheeran
120 தொகுதிகளுக்கு விருப்பமனு!
அ.திமு.க. களேபரம்!
1 min
December 27-30, 2025
Nakkheeran
பொருநை தமிழர்களின் பெருமை! முதல்வர் பெருமிதம்!
கீழடி அகழாய்வுகள், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் வெளிப்பட்ட, தமிழர்களின் தொன்மையான காலத்தை ஏற்க மறுத்த ஒன்றிய அரசுக்கு அந்த அரிதானவைகளை அருங்காட்சியகப்படுத்தி உறைக்க வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
2 mins
December 27-30, 2025
Nakkheeran
உதவிப் பேராசிரியர் தேர்வு! வசூல் வேட்டையில் பழைய டீம்!
உதவிப் பேராசிரி யர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு பணிகளைச் செய்துவருகின்ற சூழ்நிலையில், பணி நியமனத்திற்கு பல லட்சங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவரும் விஷயம் வெளியில் கசிந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
2 mins
December 27-30, 2025
Nakkheeran
டூரிஸ் டாக்கீஸ்
தொடர் வெற்றி மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய பிரதீப் ரங்கநாதன் தற்போது சற்று கலக்கத்தில் இருக்கிறார்.
1 mins
December 27-30, 2025
Nakkheeran
யாருக்கு சீட் ?
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. அதில் போளூர் தொகுதியும் ஒன்று. தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.
2 mins
December 27-30, 2025
Nakkheeran
அசிங்கப்பட்ட விஜய்! அசத்தும் பள்ளி கல்வித்துறை!
“பள்ளிக்கூட அளவில் இடைநிற்றல் (School Dropout) அதிகம் ஆனது யாரோட ஆட்சியில?” என்று ஈரோடு கூட்டத்தில் கத்திக் கத்தி கேள்வி எழுப்பினார் த.வெ.க. விஜய்.
4 mins
December 27-30, 2025
Translate
Change font size
