Facebook Pixel பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை | Champak - Tamil - children - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை

Champak - Tamil

|

February 2025

அது பிப்ரவரி 13, காதல் வனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

- சுசித்ரா ராமதுரை

பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை

மறுநாள் எமரால்டு குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நடைபெறவிருந்த தங்கள் வருடாந்திர காதலர் தின கண்காட்சிக்கு வனவாசிகள் தயாராகிக்கொண்டிருந்தனர். குளம் மற்றும் அதன் வளாகத்தின் இறுதி சுத்தம் நடந்து கொண்டிருந்தது, அதற்கு ஸ்டெல்லா முள்ளம்பன்றி பொறுப்பேற்று இருந்தது.

"குல்மோஹர் மரத்திற்கு அருகில் உள்ள தொட்டிகளுக்கு குப்பைகளை கொண்டு செல்லும்போது யாரும் குப்பைகளை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தன்னார்வலர்களுக்கு நினைவு படுத்தியது ஸ்டெல்லா.

விற்பனையாளர்கள் தங்கள் கூடாரங்கள் மற்றும் பொருட்களுடன் வரத் தொடங்கினர். ஜோஜோ கரடி, டிரிஃப்ட் மரத்தில் செதுக்கப்பட்ட இதய வடிவப் பெட்டிகளைக் கொண்டு வந்தது, மேலும் டிப்பி மான் ஸ்ட்ராபெரி ஜாம் கொண்ட இதய வடிவ ஜாடிகளை அடுக்க தொடங்கியது. புத்திசாலி வின்னி ஓநாய், தன் கைகளாலேயே இதய வடிவ எம்பிராய்டரி கைக்குட்டைகளை உருவாக்கியது,

"ஒரு விற்பனையாளரை மட்டும் இன்னமும் காணவில்லை. பெர்சி எங்கே?" ஸ்டெல்லா தனது பட்டியலைச் சரிபார்த்த பிறகு தனது உதவியாளர் மிண்டு குரங்கைக் கேட்டது.

"இன்று காலை நான் அதன் வீட்டைக் கடந்து சென்றபோது, சத்தமாக குறட்டை விடுவதை கேட்டேன்," என்று ஜோஜோ தனது ஸ்டாலில் இருந்து பதில் அளித்தது.

ஸ்டெல்லா பெர்சி பன்றியைப் பார்க்க மிண்டுவை அனுப்ப முடிவு செய்தது.

அங்கு செல்ல செல்ல, மிண்டுவுக்கும் பெர்சியின் குறட்டையை கேட்க முடிந்தது.

image"டிார்..காரர்மம்ப்ப்ஹ்.. ட்ர்ர்ர்ர்,” பெர்சியின் உரத்த குறட்டை சத்தத்தால் வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் கூட அதிர தொடங்கின. மிண்டு வெளியே மரத்தில் ஏறி, பெர்சியின் ஜன்னலை எட்டிப் பார்த்தது. பெர்சி தனது படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

"நம்பவே முடியவில்லையே," மிண்டு நினைத்தது. "நம் காட்டின் மிகவும் கடின உழைப்பாளிகளில் ஒன்றுதான் பெர்சி. பெர்சியின் பை கேக்குகள் பிரபலமானது, அதை வாங்க பலர் விரும்புவார்களே. நான் பெர்சியை எழுப்பியே ஆக வேண்டும்."

மிண்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து பெர்சியை எழுப்ப ஆரம்பித்தது.

FLERE HISTORIER FRA Champak - Tamil

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!

ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

நட்பின் வாக்குறுதி

பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size