試す 金 - 無料
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
Kanmani
|May 27, 2026
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
பணமதிப்பு நீக்கம், மேக் இன் இந்தியா, ஒரே நாடு, ஒரே ரேஷன் உள்ளிட்ட பல திட்டங்களை எளிதாக அறிவித்தார். ஆனால், அது கடினமான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது.
அப்படித்தான் தற்போது தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை நோக்கி இந்தியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு 7 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
அடுத்த ஓராண்டுக்கு தேவையற்ற தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருள் சேமிப்பை வலியுறுத்த வேண்டும். தனிநபர் வாகனங்களுக்கு பதிலாக பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்தை நோக்கி நகர வேண்டும். உள்நாட்டுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தி இந்திய உற்பத்தியை ஆதரிக்க வேண்டும். தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்து உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகளை அள்ளி வீசியுள்ளார். அறிவுரை சொன்ன அடுத்த கணமே வெளிநாட்டு பயணத்திற்கு அவர் ஆயத்தமானது வேறு கதை.
மேற்கண்ட ஆலோசனைகள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு அரசு திட்டங்களாக வடிவமைத்துள்ளார். ஆனால் அவை ஏட்டளவிலேயே இருப்பது தான் இன்றைய இழிநிலை.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் ... ரயில்வே போன்ற பொதுப் போக்குவரத்துகளில், சாதாரண வகுப்புப் பெட்டிகளை குறைத்தும், வந்தே பாரத் உள்ளிட்ட மோசடி கட்டண கொள்ளை ரயில்களை நுழைத்தும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணத்தை மறக்கடித்தது இந்த மோடி அரசுதான்.
இரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரம், உயிரி உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சியும் மானியமும் வழங்கும் திட்டம் இதுவரை எந்த வயல்களையும் எட்டிப் பார்க்கவில்லை.
このストーリーは、Kanmani の May 27, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kanmani からのその他のストーリー
Kanmani
புது விதமான அனுபவம் தேவை!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.
2 mins
May 27, 2026
Kanmani
ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?
உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.
2 mins
May 27, 2026
Kanmani
வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?
கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.
2 mins
May 27, 2026
Kanmani
மழை தேடி நிற்பவள்!
கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.
1 mins
May 27, 2026
Kanmani
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
3 mins
May 27, 2026
Kanmani
கருப்பு
சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 mins
May 27, 2026
Kanmani
என்னோட முதல் சாய்ஸ்!
தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
2 mins
May 27, 2026
Kanmani
ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.
3 mins
May 27, 2026
Kanmani
மொபைல் அணு உலை!
அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.
1 min
May 27, 2026
Kanmani
கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்
இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.
3 mins
May 27, 2026
Listen
Translate
Change font size

