試す 金 - 無料
கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்
Dinamani Villupuram
|August 06, 2025
மருத்துவ குணமிக்க கொய்யா சாகுபடியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம், ஆக.5: குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்தல், அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு மானியம், தரிசு நிலங்களில் தொகுப்பாக சாகுபடி செய்வதற்கு முழு மானியம் போன்றவை தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுவதே கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், கண்டமங்கலம், மேல்மலையனூர், செஞ்சி, ஒலக்கூர் போன்ற ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொய்யா சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் கொய்யா பழங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தோட்டக்கலைத்துறை உதவி: விழுப்புரம் மாவட்டத்தில் கொய்யா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கொய்யா பதியம், இடுபொருள்கள் போன்றவை தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அவர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்றவாறு பதியத்தை வழங்கும் தோட்டக்கலைத்துறை, அடர் நடவு முறை மேற்கொண்டால் ஹெக்டேருக்கு ரூ.48 ஆயிரம் மானியத்தையும் வழங்கி வருகிறது. மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கொய்யா மரங்கள் பலன் தரும் என்பதால் விவசாயிகள் தொடர்ந்து வருவாய் பெற முடியும் எனக் கூறும் தோட்டக்கலைத்துறை, அதற்கான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.
このストーリーは、Dinamani Villupuram の August 06, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Villupuram からのその他のストーリー
Dinamani Villupuram
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Villupuram
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Villupuram
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Villupuram
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Villupuram
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

