இரட்டைப் பெருமை!
Dinamani Pudukkottai
|October 31, 2025
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
-
குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிர் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி கடும் போட்டியை எதிர்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.
தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிர் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவர் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பார்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.
இந்திய ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனர்.
このストーリーは、Dinamani Pudukkottai の October 31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Pudukkottai からのその他のストーリー
Dinamani Pudukkottai
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Pudukkottai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Pudukkottai
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Pudukkottai
காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Listen
Translate
Change font size
