試す - 無料

மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது

Dinamani Madurai

|

July 02, 2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 08, 2026

Dinamani Madurai

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Madurai

மீண்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தைகள்

புவி சார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி உயர்வு அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Madurai

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Madurai

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Madurai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size