試す - 無料

மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை

Dinamani Karur

|

September 03, 2025

சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.

- உதயமு. வீரையன்

தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆவணம் என்று கூறப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை இந்தக் கொள்கை உள்ளடக்கியது. முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசும், இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசும் கொண்டு வந்தன.

மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் ஒரு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களைப் புறக்கணித்து விட்டு, கல்வியாளர்கள் என்ற பெயரில் கட்சி ஆதரவாளர்களை வைத்து கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் கொள்கைகள் கல்விக் கொள்கைகளாகத் திணிக்கப்படுகின்றன.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசர அவசரமாக இந்திரா காந்தி தமது அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவந்தார். அது இப்போது பாஜக ஆட்சிக்கும் வசதியாகப் போய்விட்டது. அவசர நிலைக் காலத்தைக் கேலி பேசும் பிரதமர் மோடி பறிக்கப்பட்ட கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு வழங்குவாரா?

மத்திய, மாநில அரசுகளிடம் சிக்கித் தவிக்கும் கல்வியின் வரலாறு மிகவும் பெரியது. 1947-ஆம் ஆண்டு தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வியறிவு இல்லாமையைப் போக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.

இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். மத்திய அரசு இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் திட்டங்களை உருவாக்கியது. பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-1949) இடைநிலைக் கல்வி ஆணையம் (1952-1953), பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் கோத்தாரி ஆணையம் (1964-66) ஆகியவற்றை நிறுவியது.

Dinamani Karur からのその他のストーリー

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size