Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

உயிர்களிடத்தில் அன்பு வேணும்...

Dinamani Erode & Ooty

|

June 19, 2025

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.

மனிதர்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளர்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிர்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து விட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணர்வினாலும் தெளிய மறுக்கிறோம்.

இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதர்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிர்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.

இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணர்த்திக்காட்டியிருக்கிறார்.

இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். 'அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே' என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

Dinamani Erode & Ooty からのその他のストーリー

Dinamani Erode & Ooty

காவல் துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Erode & Ooty

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Erode & Ooty

மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் நூற்றாண்டு விழாவையொட்டி தமி ழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். சத்ய சாய்பாபா பெயரிலான நலப் பணி கள் தொடர வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்

துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.

time to read

1 min

November 23, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அறந்தலைப்பிரியா ஆறு எது?

பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.

time to read

2 mins

November 23, 2025

Dinamani Erode & Ooty

பதிப்புலகின் முன்னோடி...

தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.

time to read

2 mins

November 23, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அவசியம்

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

time to read

1 mins

November 23, 2025

Translate

Share

-
+

Change font size