போர்க் களம்
Nakkheeran
|October 23-25, 2024
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
-
விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிற நிலையில் அதற்குப் பயன்படுமே என்று எங்களுடைய செய்தித்துறையின் மூலம் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தோம்; ஆளுநரும் அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியைவிட எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது செல்வி. ஜெலலிதா அவர்கள் செய்த சதி வேலைகள்தான்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புரூக் ளின் மருத்துவமனையில் டாக்டர் ப்ரீட்மேன் அவர்கள் தலைமையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு, புரட்சித் தலைவர் அவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை அளித்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்குள் புரட்சித் தலைவரின் உடல்நிலையில் அதிசயத் தக்க வகையில், மருத்துவர்களே ஆச்சர்யப்படும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில்தான்... எதிர்பாராமல் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடத்து வது என்கிற முடிவை எடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் பாக்கியிருந்தன. ஜுன் மாதம்தான் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்; என் அதோடு சேர்த்து சட்டமன்றத் தேர்த நடத்திவிடலாம் என்று நான் நினைத் தேன். அன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண் டிருந்த மூத்த அமைச்சர் நாவலரிடமும், மற்ற வர்களிடமும் சொல்லி அந்த முடிவை எடுப் பதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் அனுபவமிக்க அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர், இந்தத் தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என்று எண்ணினார்கள்.
அழுத்தத்தோடு பேசத் தொடங்கி னேன்... 'இரண்டு தேர்தலையும் ஒன்றாக இணைத்துதான் நடத்த வேண்டும்' என்று அழுத்தமாக, உறுதியாக நான் பேசியதற்குப் பிறகு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசாங் கத்திற்கு அறிவித்தோம். மத்திய அரசாங்கமும் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்துவதற்கு ஒத்துக் கொண்டது. தேர்தல் வேலைகளில் ஈடுபட்டோம். வேட்பாளர் தேர்வுகள் நடைபெற்றன. நல்லவேளையாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சிமன்றக் குழுவிலோ தலைமைக் கழக நிர்வாகத்திலோ இல்லாத காரணத்தினால்
இந்தத் தேர்தல் நடவடிக்கைகளிலே நேரிடை யாக அவர்களாலே குறுக்கிட முடியவில்லை.
このストーリーは、Nakkheeran の October 23-25, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Nakkheeran からのその他のストーリー
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size

