நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
Aanmigam Palan
|July 16-31, 2025
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்" திகழ்கிறது.
தமிழ்நாட்டில், நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோயில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், கோடகநல்லூர் போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு, நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால், பெருமைமிக்கதாகும். ஆனால், நாகருக்கென்றே தனிக்கோயில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் “நாகர்கோவில் நாகராஜா கோயில்" மட்டுமே ஆகும். ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்தது.
வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது திடீரென செங்குருதி கொப்பளித்தது.
இதைக் கண்டு பயந்து போன அந்தப் பெண், அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்த போது, அங்கே பாறை ஒன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர்.
இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே, அந்தப் பகுதி மக்கள் தினமும், அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது. முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒருமுறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் பார்த்தாண்டவர்மா, நாகராஜா கோயிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால், கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கு ஏற்ப ஓலைக்கூரையாலேயே வேயப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்துவிட்டு, புதிய ஓலை கொண்டு கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டடக்கலை பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. பல நூறு ஆண்டுகளைக் கடந்த பிறகும் இப்போதும் நாகரின் கருவறை ஓலைக் குடிசையாகவே உள்ளது. களக்காடு மகாராஜா உட்பட எத்தனையோ பணக்காரர்கள் நாகராஜாவுக்கு பிரம்மாண்டமான கருவறையுடன் கூடிய ஆலயம் கட்டித்தர முன் வந்தனர்.
यह कहानी Aanmigam Palan के July 16-31, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Aanmigam Palan से और कहानियाँ
Aanmigam Palan
இசைக்காகவே ஊத்துக்காடு
அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அம்மைநோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.
1 min
July 16-31, 2025
Aanmigam Palan
நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வையத்து வாழ்வீர்காள்!
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!
நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!
நாகபஞ்சமி - ஜூலை 29,2025
3 mins
July 16-31, 2025
Translate
Change font size

