Facebook Pixel அமைதிக்குப் பரிசு! | Dinamani Kanyakumari - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

அமைதிக்குப் பரிசு!

Dinamani Kanyakumari

|

October 31, 2025

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

- முனைவர் வைகைச்செல்வன்

அமைதிக்குப் பரிசு!

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமை களுக்காக அயராது உழைத்து வருபவர் மச்சாடோ. சர்வாதிகாரப்போக்கில் இருந்து, ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி, அமை தியான மாற்றத்தை எதிர்நோக்கி மரியா போராடி வருவதாக புகழாரம் சூட்டப்பட் டிருக்கிறது. டிரம்ப் உள்ளிட்ட 388 பேர் களின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலாவின் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இங்கு தோட்டாக்கள் வேண்டாம்; வாக்குகள் தான் வேண்டும்; ஜனநாயக முறையில் தேர் தல் நடத்தலாம் என்று 20 ஆண்டுகளுக்கும் மேல் மரியா போராடி வருகிறார். நேர்மை யான சுதந்திரமான தேர்தல் நடத்த வேண் டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற இவரது போராட்டத்துக்கு, நோபல் பரிசு ஓர் அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி - 1967-ஆம் ஆண்டு அக்டோ பர் 7-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகஸ்லில் பிறந்தவர். அரசியல் மட்டு மன்றி தொழில் துறை பொறியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டின் ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்து வருபவர். இதனால், பொது மக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்து வருகிறார்.

மச்சாடோ கடந்த 14 மாதங்களாக தலை மறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும்கூட, அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது இந்த நாட்டு மக்களின் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் புகழைச் சம்பா தித்துத் தந்திருக்கிறது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவேதான், இவரை 'இரும்புப் பெண்மணி' என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறார்கள்.

வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மடூரோ வின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார். அச்சுறுத்தல்கள், கைதுகள் மற் றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனா லும், ஆயுதம் இல் லாமலே தங்களது போராட்டம் தொட ரும் என்று துணிச்சலையும், உண்மையை யும் துணைக்கு அழைத்துக் கொண்டு இவரது ஜனநாயகப் போராட்டக் களம் பேசுபொருளாகி இருக்கிறது.

Dinamani Kanyakumari

यह कहानी Dinamani Kanyakumari के October 31, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Kanyakumari से और कहानियाँ

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

time to read

3 mins

May 10, 2026

Dinamani Kanyakumari

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Kanyakumari

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Kanyakumari

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size