कोशिश गोल्ड - मुक्त

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

Dinamani Dharmapuri

|

April 24, 2025

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

சென்னை, ஏப். 23:

7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கட்டணங்கள் குறித்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மீது, விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

அப்போது நடந்த விவாதம்:

எஸ்.எஸ்.பாலாஜி: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் எப்படி அரசின் சார்பிலான குழுவிடம்புகார்களை அளிப்பார்கள்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. அந்தப் பல்கலைக்கழகங்களையும் அரசின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும்.

சி.விஜயபாஸ்கர்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில கல்லூரிகளில் அடிப்படைப் பொருள்களை பணம் கொடுத்து மாணவர்களே வாங்கிக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்கள். அதன்பிறகு, அதற்கான பணத்தை தருகிறார்கள். எனவே, அது போன்ற நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பயிற்சி பெறும்போது, மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மாதாந்திர தொகையை சில சுயநிதிக் கல்லூரிகள் தருவதில்லை.

தி.வேல்முருகன்: சுயநிதிக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரதமர் குறிப்பிட்டது திமுகவைதான்; தமிழக மக்களை அல்ல: பாஜக

'பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்' தமிழக மக்களை அல்ல' என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது ஆர்ய சமாஜம்

பிரதமர் மோடி பாராட்டு

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size