அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
Dinamani Cuddalore
|April 25, 2025
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உன்னதமான அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிடுகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தகம், இளைஞர் நலன் இவற்றில் கவனம் செலுத்தும் முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகநாடுகள் மீது வர்த்தக வரிகளை மாற்றி அமைத்துள்ளார். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களே இல்லாத தீவுகள்கூட, வெள்ளை மாளிகையின் வரி விதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனப் பலநாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. பென்குயின்கள் மட்டுமே வாழும் ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்கள் என்றாலும் அங்கே மனிதர்களே இல்லை.
அமெரிக்க வர்த்தக செயலாளர் இதற்கு விளக்கமளித்துள்ளார். வர்த்தகத்தில் குறுக்குவழிகளை மூடுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீவுகள் வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலம் அமெரிக்காவை அடைவதைத் தடுப்பதற்காகவே ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஆஸ்திரேலியா இதை அவசரமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்கிறது. தொழிலதிபராக இருந்த டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை நெறிப்படுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. வரிப் பட்டியலில் எந்தப் பகுதியாவது விலக்கு அளிக்கப்பட்டால் அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பார்கள் என்பது டிரம்ப்பின் பார்வையாக உள்ளது.
यह कहानी Dinamani Cuddalore के April 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Cuddalore से और कहानियाँ
Dinamani Cuddalore
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Cuddalore
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Cuddalore
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் ஜன.
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Cuddalore
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Cuddalore
அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 04, 2026
Translate
Change font size
