कोशिश गोल्ड - मुक्त
உருவாகிறது ‘நகரும் கோயில்’...
Dinamani Chennai
|November 30, 2025
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதற்கிணங்க, கோயில்களைத் தேடிச் சென்று அங்கு உறைந்திருக்கும் இறைவனை வணங்குவோம். சில சமயங்களில் இறைவனே நம்மைத் தேடி வந்து காட்சி தருவதும் உண்டு. பெருந்திருவிழாக் காலங்களில் வீதியுலா என்கிற விஷயத்தை ஏற்படுத்தியதன் காரணம் மிக உயர்வானது. வயதானவர்களும் உடல் நலம் குன்றியவர்களும்கூட இறை தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக விதவிதமான அலங்காரங்களில் தெய்வத்திருமேனிகளை உலா வரச் செய்கின்றனர்.
விழாவின் முக்கிய அம்சமாக அமைவது ‘ரதோத்சவம்’ எனப்படும் தேர்த் திருவிழா. அப்படிக் கருவறைத் தெய்வத்துக்கு இணையான உலாத்திருமேனியரைத் தாங்கி வரும் தேர்கள் பெரிதும் போற்றுதலுக்குரியவை.
‘நகரும் கோயில்’ எனப்படும் தேரின் உருவாக்கம் பற்றிய அரிய செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மாமல்லபுரத்தைச் சார்ந்த தேர் ஸ்தபதி புஷ்பராஜ். பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், மாமல்லபுரம் அரசு கலைக் கல்லூரியில் நுண்கலைகளுக்கான பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.
அவருடன் ஒரு சந்திப்பு:
தேர் செய்வதற்கான மரங்களை எப்படித் தெரிவு செய்கிறீர்கள்?
தேருக்கான மரம் தெரிவு செய்வதுதான் மிகப் பெரிய விஷயம். பாரம்பரிய முறைப்படி செய்கிற காலகட்டத்தில் தேருக்கான மரம் வெட்டுவதற்காக வனப்பகுதிக்குச் செல்வதே ஒரு விழா போல இருக்கும். நல்ல நேரம் பார்த்து பூஜைகள் செய்து, மங்கள வாத்தியம் ஒலித்திட, கீழ்த்திசை நோக்கித்தான் செல்ல வேண்டும். பால் மரமாக, பசுமையாக இருக்க வேண்டும். பழமரமாகவும் பட்டுப்போன மரமாகவும் இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட மரம் சாய்வதுகூட கிழக்குத் திசை நோக்கித்தான் இருக்க வேண்டும். இப்படி நிறைய ... ஆனால், இப்பொழுதெல்லாம் இம்முறைகள் அரிதாகி விட்டன. மரவாடியில் இருந்து வாங்கி வந்து விடுகிறார்கள்.
பழமரம் இருக்கக் கூடாது என்றீர்களே ?
ஆம். பழமரம் என்றால் காய்க்கும் மரம். பழங்கள் இருந்தால் அதை உண்பதற்காக பறவை முதலான சிறுஉயிரினங்கள் வந்து அடையும். வெட்டும்போது அவற்றுக்கு ஆபத்து உண்டாகும். அதேபோல் பறவைகள் வசிக்கும் மரம். அதைக் கூடுமரம் என்போம். அவற்றையும் தவிர்த்து விடுவோம்.
வெட்டியவுடன் என்ன செய்வீர்கள்?
यह कहानी Dinamani Chennai के November 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Chennai से और कहानियाँ
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

