कोशिश गोल्ड - मुक्त
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
DINACHEITHI - MADURAI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப்புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ன்றையதினம் திறந்து வைக்கப்பட்ட இ கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம் இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
यह कहानी DINACHEITHI - MADURAI के May 21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 22, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
1 mins
January 22, 2026
DINACHEITHI - MADURAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - MADURAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - MADURAI
கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்தார், ஆளுநர்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தொடர்ந்து உரையை சபாநாயகர் படித்தார்
1 mins
January 21, 2026
DINACHEITHI - MADURAI
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
Translate
Change font size

