Essayer OR - Gratuit
முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!
Thozhi
|16-31, July 2025
பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக் காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்கா கவே சட்டைப் பாக்கெட்டு களில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.
-
“மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்..!” என்பது அனைவருக்கும் பரிச்சயமான பழமொழி. வயதில் முதிர்ந்த மூத்தோர் கூறும் அறிவுரைகள் முதலில் கசந்தாலும், அதனைக் கேட்டு நடந்தால், முடிவில் இன்பமே விளையும் எனப் பொருள்படும் இந்தப் பழமொழிக்கு உவமையாக நிற்பது நமது அதியமான், அவ்வையின் முதுநெல்லிக்காய்தான்!
முதுநெல்லிக்காயின் தாவரப்பெயர் Phyllanthus embilica. பொதுப்பெயர் Indian Gooseberry. தோன்றிய இடம் இந்தியா. ஆம்லா, ஆம்லகி, ஆம்லகம், நெல்லிக்காய், உசிரிக்காயா, ஆன்லா என நம் நாட்டில் பற்பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, எம்பிலிக், மிரோபலா, கிம்லாக்கா, பலாக்கா, மலாக்கா என தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோரங்கம், மிருதுபாலா, ராஜகனி, தாத்ரீ என இலக்கியப் பெயர்களும் நெல்லிக்கு உண்டு. பெயரில் இத்தனை விந்தைகளை சேர்த்திருப்பது போல, சுவையிலும், தனது தனித்துவ குணத்திலும் பற்பல விந்தைகளை உள்ளடக்கியது நெல்லி.
நெல்லியை உண்ணும்போது துவர்ப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளை ஒருங்கே தந்து, பின்னர் இனிப்புச் சுவையினைத் தரும் இந்தக் கனி, பச்சை மற்றும் மஞ்சள், இளஞ்சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது. இதில் நாட்டுநெல்லி எனப்படுகிற அரைநெல்லிக்காயாகிய சிறிய நெல்லி, முற்றிலும் வேறு தாவரம் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்வோம்.
ஏழைகளின் ஆப்பிள் எனப்படுகிற முதுநெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன எனக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அவற்றின் ஊட்ட அளவுகளையும் எடுத்துரைக்கின்றனர். குறைந்த கலோரி, அதிக நீர்த்தன்மை, அதிக நார்ச்ச்த்து, அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் நெல்லியில் நிறைந்துள்ளன.
Cette histoire est tirée de l'édition 16-31, July 2025 de Thozhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Thozhi
Thozhi
The Biology of Belief
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.
3 mins
December 15-31 2025
Thozhi
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
3 mins
December 15-31 2025
Thozhi
பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word
4 mins
December 15-31 2025
Thozhi
வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.
2 mins
December 15-31 2025
Thozhi
சுக்ரீஸ்வரர் கோயில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.
1 mins
December 15-31 2025
Thozhi
அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!
ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2 mins
December 15-31 2025
Thozhi
மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.
1 min
December 15-31 2025
Thozhi
முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.
2 mins
December 15-31 2025
Thozhi
பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!
தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.
2 mins
December 15-31 2025
Thozhi
களைவு
“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.
2 mins
December 15-31 2025
Translate
Change font size
