Facebook Pixel அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம் | Aanmigam Palan - religious-spiritual - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

Aanmigam Palan

|

July 16-31, 2025

"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிசம்தான் உண்கிறது; காய் கறிகளையோ பழங்களையோ உண்பதில்லை. யானை காய்-கறிகள், பழங்கள் ஆகியவற்றைத்தான் உண்கிறது; மாமிசத்தை உண்பதில்லை. அனைத்துமே இவ்வாறு முறை மீறாமல் ஒழுங்காகவே நடந்து கொண்டிருக்கின்றன.

நாம்தான் ஏழு மணிக்கு இருந்ததைப் போல, ஏழே கால் மணிக்கு இருப்பதில்லை. மாறிப்போனது நாம்தான்.

இப்படி இயற்கைக்கு மாறாக நடக்காமல் அனைத்துமே இயல்பாக நடக்கும் போது, கருணைபுரிவதையே தன் இயல்பாகக் கொண்ட அம்பிகை, மாறுவாளா? என்றென்றும் அருள்மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறாள். இதிஹாச-புராணங்களில் மட்டுமல்ல; 'தீமைகள் நிறைந்தது கலியுகம்' என்று சொல்லப்படும் இப்போதும் நம்மைக்கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள் அம்பிகை.

இதோ! இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அதை விளக்குகிறது.

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ - என்று புகழப்படும் மாயூரம் திருத்தலத்தில், ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். குழந்தையின் நேரமா? அல்லது அக்குழந்தையைக் கொஞ்சி மகிழப் பெற்றோர்களுக்குக் கொடுப்பினை இல்லையா? - என்பது தெரியவில்லை.

கிருஷ்ணசாமி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.

உறவினர்களே கிருஷ்ணசாமியை வளர்த்தார்கள். என்ன இருந்தாலும் தாய்க்கு ஈடாகுமா? கிருஷ்ணசாமி அவ்வப்போது, “அம்மா! அம்மா!” என்று கதறினார். அந்தக்குரல், அனைத்து உயிர்களுக்கும் அன்னையான அம்பிகையை ஆட்டிப்படைத்தது. அவள் வந்து விட்டாள்.

ஆம்! மாயூரத்தில் இருக்கும் அன்னை அபயாம்பிகை, திருக்கோவிலில் இருந்து குழந்தை கிருஷ்ணசாமியைத் தேடி வந்து விட்டாள். வந்தவள் குழந்தையை அள்ளி அரவணைத்து அமுதம் அளித்து ஆறுதல் படுத்தினாள்.

இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.

ஒருநாள்... குழந்தை அழும்போது, அதன் தாயின் வடிவிலேயே வந்தாள் அம்பிகை; வழக்கப்படி உணவு ஊட்டினாள். அதன் கையைப் பிடித்து மெள்ள அழைத்துப் போய், திருக்கோவிலில் தன் சந்நிதியில் நிறுத்தி மறைந்தாள். இனிமேல், அந்தக் கிருஷ்ணசாமியை, அம்பிகையின் அருள் பெற்ற அந்த உத்தமரை 'அபயாம்பிகை பட்டர்' என்றே பார்க்கலாம்.

அன்று முதல் அபயாம்பிகை பட்டர் நாள்தோறும் மாயூரநாதர் ஆலயத்திற்குச் சென்று, மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்துத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

PLUS D'HISTOIRES DE Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size