Essayer OR - Gratuit
புதியதொரு அரசியல் மாற்றம்?
Tamil Mirror
|September 08, 2025
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்தார். அவருடன் அவருடைய சகோதரர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து யுத்தத்தை முடித்து வைத்தார்.
பின், அவருடைய ஆட்சி சில வருடங்களில் ரணில், சந்திரிகா, மங்கள சமரவீர, கரு ஜயசூரிய உள்ளிட்ட பட்டாளத்தின் முயற்சியால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமரானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நிபந்தனையற்ற ஆதரவினை அரசுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.
அவ்வேளையில், தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் பின்னர் உருவான அரசியல் சூழல் ரணிலை பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது. ஆனாலும், அதற்கெதிராக நீதிமன்றம் சென்று மீண்டும் ரணில் பிரதமரானார். பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆசனங்களால் வென்று ஆட்சியையும் கைப்பற்றியது. அவ்வேளையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக கோட்டபாய அறிவித்தார்.
கோட்டபாய மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடைமுறைக் காரணங்கள் பலவற்றால் உருவான பொருளாதாரப் பிரச்சினைகளால் அவரது ஆட்சி இல்லாமல் போனது. ரணில் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார். இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலில் 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத ஒரு விடயமாகவும் இது பதிவானது.
அவ்வாறு அவர் தெரிவான பின்னர் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏனைய கட்சியினர் பெரும்பான்மையற்ற ஜனாதிபதியாகவே அனுர தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். நாம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணிக் கொண்டனர். ஆனால், நடைபெற்றதோ வேறு விதமாக இருந்தது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையான ஆசனங்களுடன் ஆட்சிக்கு வந்தது, எல்லோரும் போட்டு வைத்திருந்த கணக்குகளும் பிழைத்துப் போயின, அதிலொன்றுதான் ஆட்சிக்கு பங்காளியாவது. அதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.
Cette histoire est tirée de l'édition September 08, 2025 de Tamil Mirror.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
