Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

புதியதோர் நகரம் செய்வோம்!

Dinamani Virudhunagar

|

May 21, 2025

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

- கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறைத் தலைவர்.

பெயர்தல் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வு. பல காரணங்களுக்காக மக்கள் இடம்விட்டு இடம் போகிறார்கள். முன்பெல்லாம் பஞ்சம் பிழைக்க கிராமங்களிலிருந்து பட்டணம் வருவார்கள். இப்போது பெருகி வரும் பொருளாதாரப் பயன்களைப் பெறவும் வசதிகளை அடையவும் மக்கள் நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க நகரங்களும் விரிவடைகின்றன. நகரமயமாக்கல் குறியீட்டில் 58 சதவிகிதமாக தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா பல்வேறு துறைகளில் ஆதிக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கணினி தொழில்நுட்பம், மருத்துவம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோ மொபைல் உற்பத்தி போன்ற பல தொழில்களிலும் துறைகளிலும் அற்புதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த எழுச்சிமிக்க முன்னேற்றத்தின் விளைவாக சுற்றுலாத் துறை சீராக வளர்ந்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் நமது அழகிய நிலப்பரப்புகளையும், காடுகளையும் பாரம்பரியம் மிக்க புராண தலங்களையும் காண வருகிறார்கள். மேலும், நவீன இந்தியாவை ஆராய முயல்கிறார்கள். இருப்பினும், அனைத்து உற்சாகமான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும், பிம்பமும் பொது இடங்களில் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே சிதைந்துவிடும்.

இலங்கை போன்ற ஏழை அண்டை நாடுகளுடனும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியத்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற நாடுகளுடனும் ஒப்பிடும்போதுகூட, நமது நாட்டின் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு உரிய வேகத்தை எட்டவில்லை. இதற்கு நமது மக்களில் பெரும்பகுதியினரிடையே அக்கறையின்மை மற்றும் குடிமை உணர்வு இல்லாதது ஒரு காரணம்; நன்கு வரையப்பட்ட கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை மெத்தனமாக உள்ளது இன்னொரு காரணம்.

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நிர்வாகத்துக்கு இது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு

அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Virudhunagar

தமிழில் மட்டுமே பேசுவோம்!

மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.

time to read

3 mins

October 28, 2025

Dinamani Virudhunagar

நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்

தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்

time to read

1 mins

October 28, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Virudhunagar

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆசிய இளையோர் கபடியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம்

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

time to read

1 min

October 27, 2025

Dinamani Virudhunagar

தீபாவளி மலர்கள் 2025

கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.

time to read

5 mins

October 27, 2025

Dinamani Virudhunagar

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

பட்டுக்கோட்டை அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

October 27, 2025

Dinamani Virudhunagar

மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!

தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.

time to read

2 mins

October 27, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தடைக்குப் பின்னால்...

ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

time to read

1 mins

October 26, 2025

Translate

Share

-
+

Change font size