Essayer OR - Gratuit
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
Dinamani Tirunelveli
|September 15, 2025
'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.
மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. 'அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு' எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.
திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், 'திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும் கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. 'காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸையும் அதன் செயல்பாடுகளையும் தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.
ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 'இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
Cette histoire est tirée de l'édition September 15, 2025 de Dinamani Tirunelveli.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani Tirunelveli
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani Tirunelveli
ரூ.91 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனையானது.
1 min
October 09, 2025
Dinamani Tirunelveli
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Tirunelveli
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Dinamani Tirunelveli
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Tirunelveli
ஈரோடு நாகமலை குன்று: தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத் தலம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை தமிழகத்தின் 4-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
October 09, 2025
Dinamani Tirunelveli
அனுபவத் தலைமையும் அவசியம்!
இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.
2 mins
October 09, 2025

Dinamani Tirunelveli
இரு கட்டங்களாக பிகார் தேர்தல்
நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு
1 mins
October 07, 2025
Translate
Change font size