Essayer OR - Gratuit

சமூக நீதியும் சம நீதியும்

Dinamani Pudukkottai

|

July 18, 2025

இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.

- சி.மகேந்திரன்

இந்திய சமூகம் ஐரோப்பிய நாடுகளைப் போன்றதல்ல. இது முற்றிலும் சமூகம் சார்ந்தது. இதன் சமூகக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. இதை அறிந்துதான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்திய சமூகத்தின் இயங்கியல் மையப்புள்ளி சமூக நீதி என்றார்.

ஆனால், இதை நிறைவேற்றுவதில் தான் பிரச்னைகள் வந்து விடுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தந்த உறுதிமொழிகளால், அதை நிறைவேற்றித் தர முடியவில்லை. ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சட்டப் பிரச்னைகளையும், சமூக மோதல்களையும் சந்திக்கும் அபாயத்தைத் தந்து விடுகிறது. சமூக நீதியை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கிறது.

முதலில் சமூக நீதியை சலுகை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உரிமை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகம் தந்த கொடுமையை அதே சமூகத்துக்குச் சரி செய்து கொடுக்கும் உயர் கடமையாகக் கருத வேண்டும். இந்த சமூக நீதியில் மற்றும் ஒரு சமூக நீதி வேண்டும் என்ற குரல் எழுந்துவிடக் கூடாது.

பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் சமூக நீதியைத்தான், சம நீதி என்கிறோம். இன்றைய சமூக நீதியில் சம நீதி இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது என்பதை வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்த தேசத்தின் வளர்ச்சியையும், மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூக நீதியாக மட்டுமே இருக்க முடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள். மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியமில்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.

பிரிட்டிஷ் கடலோடிகளால் இந்திய அரசர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது மிகவும் சுலபமாக இருந்தது. காடுகள், மலைகள், கடற்கரை பெரும் மணல் பரப்பு என்ற பிரிந்து கிடந்து, சமூகம் சமூகமாக வாழ்ந்து வந்த இனக்குழுக்களை இவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இவர்களது துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களிடம் செல்லுபடியாகவில்லை. அந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற அந்நியர்கள் திரும்பி வரவும் இல்லை.

PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

January 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Pudukkottai

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Pudukkottai

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Pudukkottai

தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்

ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Pudukkottai

திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்

time to read

1 mins

January 11, 2026

Translate

Share

-
+

Change font size