Essayer OR - Gratuit
பிப்ரவரி பட்ஜெட்டில் வியத்தகு அறிவிப்புகள் இருக்காது: நிதியமைச்சர்
Dinamani Chennai
|December 08, 2023
2024, பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் வியத்தகு அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
-
அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலையில் தாக்கல் செய்யும் என்று அவா் குறிப்பிட்டாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் உலகளாவிய பொருளாதார கொள்கை மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘பிப்ரவரி 1-இல் தாக்கலாகும் பட்ஜெட், சாதாரண இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும். தோ்தல் நேரம் என்பதால், புதிய அரசு அமையும் வரையில் மத்திய அரசின் செலவினங்களை எதிா்கொள்வதற்கான பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். வியத்தகு அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்பதே உண்மை. எனவே, புதிய அரசு அமையும் வரை காத்திருக்க வேண்டும்’ என்றாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போது நிதித் துறைக்குப் பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தாா். அதில், 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கும் முக்கியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், சம்பளதாரா்களுக்கு தரநிலை வரிக் கழிவு ரூ.40,000-இல் இருந்து ரூ.50,000-ஆக உயா்த்தப்பட்டது.
Cette histoire est tirée de l'édition December 08, 2023 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!
'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.
1 min
May 13, 2026
Dinamani Chennai
உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா
அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு
முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
1 min
May 13, 2026
Dinamani Chennai
தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.
2 mins
May 13, 2026
Dinamani Chennai
போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்
அரசாணை வெளியீடு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Chennai
மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min
May 13, 2026
Translate
Change font size
