Essayer OR - Gratuit
தமிழகத்தில் தொடங்கும் எஸ்ஐஆர்
Dinakaran Trichy
|September 28, 2025
சொந்த மாநிலங்களை விட கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதால் தங்கள் குழந்தைகளை வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வளர்க்கவே அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிகளிலேயே படிக்க வைக்கிறார்கள். அப்படியிருக்கையில் வாக்குரிமையையும் தமிழ்நாட்டிலேயே பெறுவதே அவர்களின் முதல் விருப்பமாக இருக்கும்.
-
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி பீகார் மாநில வாக்காளர்கள் மட்டும் சுமார் 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பீகாரில் இருந்த நீக்கப்பட்ட இவர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிழைப்புக்காக ஒரு மாநிலத்துக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் அந்த மாநிலத்தின் அரசியலையே மாற்றிவிடும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வடமாநிலத்தில் போட்டியிடுவதில்லை.
வடமாநிலத்தில் இருந்து வரும் மக்கள் பாஜ, காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்புவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திராவிட அரசியல் வலிமையாக உள்ள நிலையில், இந்த அரசின் திட்டங்களை வடமாநில மக்கள் அனுபவித்துவிட்டு, பாஜவினருக்கு ஓட்டு போட வாய்ப்பளிக்கக் கூடும். ஏற்கனவே, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாமல் தவிக்கும் பாஜ, வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்து குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கியை வாங்கி உள்ளனர்.
தற்போது இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வடமாநில வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்த்து ஒட்டு வங்கியை அதிகரிக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜ வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் பீகாரில் நடத்தியதுபோல சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் எவ்வளவு வடமாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்று தமிழ்நாட்டிலும் தேர்தல் தில்லுமுல்லு நடைபெறுமா என்று கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
Cette histoire est tirée de l'édition September 28, 2025 de Dinakaran Trichy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Trichy
Dinakaran Trichy
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Trichy
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min
June 18, 2026
Dinakaran Trichy
4 பேர் அளித்த விளக்கத்தை இனிதான் பார்க்க வேண்டும்
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி?
1 min
June 18, 2026
Dinakaran Trichy
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்
முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
1 min
June 18, 2026
Dinakaran Trichy
மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி. மாஸ்டர் மீது ஆசிட் வீச்சு
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
1 min
June 18, 2026
Dinakaran Trichy
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Dinakaran Trichy
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Translate
Change font size

