Facebook Pixel தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு | Dinakaran Nagercoil - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு

Dinakaran Nagercoil

|

December 05, 2025

தடுப்புகள் உடைப்பு, போலீஸ் மீது தாக்குதல்: மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரியிருந்தார். இவ்வழக்கில் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் ராம. ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மனுதாரர் 10 பேருடன் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, “தனி நீதிபதி நேற்று முன்தினம் மாலை 6.05 மணிக்கு விசாரித்தபோது, தீபம் ஏற்றப்பட்டதா, இல்லையா என்றார். மனுதாரர் தரப்பு இல்லை என்றது. இதையடுத்து நீதிபதி உடனடியாக சிஐஎஸ்எப்பை அழைத்து உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரிக்கலாம். விளக்கம் கேட்கலாம். ஆனால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதி நீதித்துறை விதிகளை மீறி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் இருக்க வேண்டும்.

கடந்த 1862ம் ஆண்டு நடந்த வழக்கில் இல்லாததை தற்போது உத்தரவிட முடியாது. நூறு ஆண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும். பல இடத்தில் தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும். அவமதிப்பு வழக்கிற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது சட்டமீறல். அரசு அப்பீல் செய்யவில்லை என்பது தவறு. உடனடியாக மனு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் செய்ய 30 நாள் அவகாசம் உள்ளது. தொடக்க நிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதாக நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இலங்கைக்கு ரூ. 6673 கோடி கடன் ஐஎம்எப் ஒப்புதல்

இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் தவணை வழங்க சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிமுகவில் தொடர்வதா? தவெகவுக்கு தாவுவதா?

ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் ஆலோசனை - எடப்பாடி பெயரை உச்சரிக்க மறுப்பு

time to read

2 mins

May 29, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மூத்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 51 ஆக குறைவு

time to read

1 min

May 29, 2026

Dinakaran Nagercoil

சட்டம் - ஒழுங்கு பற்றி கேள்வி கேட்காதீங்க...

ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பியபோது, அதை பற்றி கேட்காதீர்கள் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinakaran Nagercoil

அதிமுக தரப்பு மனுக்கள் மீது சபாநாயகர் இன்று முக்கிய முடிவு

எடப்பாடி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் ஒன்றிணைந்த நிலையில் அதிமுக தரப்பு மனுக்கள் மீது சபாநாயகர் இன்று முக்கிய முடிவு

time to read

1 min

May 29, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீதித்துறையிலும் ஊழல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது

நீதிபதிகளை புனிதர்கள் என்று கருத வேண்டிய அவசியமில்லை.

time to read

2 mins

May 29, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமைச்சர் பார்த்திபனை பயணிகள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம்

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து இயக்காத போக்குவரத்து துறை

time to read

1 mins

May 29, 2026

Dinakaran Nagercoil

குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

இன்று இரவு 2வது குவாலிபயர் போட்டி

time to read

1 mins

May 29, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒரு முறை வீழ்த்தி அதிர வைத்துள்ளார்.

time to read

1 min

May 29, 2026

Dinakaran Nagercoil

கென்யாவில் பள்ளி மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size