Intentar ORO - Gratis
இந்தோனேஷியாவில் காண வேண்டிய புராதன சின்னங்கள்!
Penmani
|August 2025
சென்ற இதழின் தொடர்ச்சியாக இந்தோனேஷியாவில் காண வேண்டிய மேலும் சில இடங்களைப் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்வோம்.
கொரோனாவுக்கு பிறகு உலகில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் களை கட்டுகிறது. இந்தியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள் புராதன சின்னங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம் அங்கு போற்றப்படுகின்றன. அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறைந்தது 1 வார காலம் தங்கி சுற்றிப்பார்க்க வேண்டிய அளவில் இந்தோனேஷியா சுற்றுலா அமைகிறது.
மகாவிஷ்ணு கோவில்: சிவன் கோவிலின் வடக்குப் பக்கத்தில் 33 மீட்டர் உயரத்தில் இக்கோவில் உள்ளது. முப்பது படிகள் மீது ஏறிச் சென்றால், மேலே நான்கு கரங்களைக் கொண்டு நிற்கின்ற விஷ்ணு பகவானைக் கண்டு தரிசிக்கலாம் கோவிலின் உட்சுவர்களில் மகாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணரின் கதை அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாமரைப் பூவின் மீது விஷ்ணு அழகாக நிற்கிறார்.
விஷ்ணு கோவிலின் எதிரில், அவரது கருட வாகனக் கோவில் உள்ளது. இந்தோனேஷிய தேசிய சின்னம் கருடர் ஆகும். கோவிலினுள் தற்சமயம் கருடர் சிலை இல்லை.
சிவபெருமான் கோவில்: பிரம்மா மற்றும் விஷ்ணு கோவில்களுக்கு நடுவே 47 மீட்டர் உயரமும், 34 மீட்டர் அகலமும் கொண்ட சிவபெருமான் கோவில் கம்பீமாக நிற்கிறது. இரண்டு சிங்கங்கள் மற்றும் வளைந்த பாறைக் கற்களை, இதன் அடிப்பாகம் கொண்டுள்ளது. படிகள் மீது ஏறிச் சென்று பார்க்கையில், தாமரைப் பூவின் மீது நிற்கும் சிவனைக் கண்டு வணங்கலாம்.
சிவன் கோவில் எதிரே, நந்தி தேவரின் கோவில் உள்ளது. நந்தி தேவரின் சிலை நன்கு பளிச்சென இருக்கிறது. மூன்று கடவுள்கள் மற்றும் அவர்களது வாகனங்களின் கோவில்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் அநேகர். புகைப்பட பிரியர்களுக்கு ஏற்ற இடம்.Esta historia es de la edición August 2025 de Penmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
