ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் வீரமணி!
Viduthalai
|May 11,2025
‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்' என்கிற கருத்தை வலியுறுத்துகிற வகையில் கடந்த மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர், ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் நடத்திய பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் கலந்துகொள்ள, ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்தார்கள்.
-
ஆஸ்திரேலியாவுக்கு முதல்முறையாக வருகைதந்த ஆசிரியர் வீரமணியையும், வழக்குரைஞர் அருள்மொழியையும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், துணைத் தலைவர் டாக்டர் ஆரூண் உள்ளிட்டோர் சிட்னி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஒரு நாள் ஓய்விற்குப் பிறகு, ஆசிரியர் வீரமணி, சிட்னி நகரைச் சுற்றிப் பார்த்தார். இரவு உணவுக்கு சிட்னி பரமாட்டாவிலுள்ள அடையார் ஆனந்தபவன் உணவு விடுதிக்கு சென்றபொழுது, சிட்னி அடையார் ஆனந்த பவனின் பங்குதாரர் ரஜிந்த், ஆசிரியருக்கும், வழக்குரைஞர் அருள்மொழிக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
மறுநாள் ஆஸ்திரேலிய அரசின் பல்லினப் பண்பாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான எஸ்பிஎஸ் தமிழ்ப் பிரிவிற்காக (Special Broadcasting Service) தலைமை செய்தி ஆசிரியர் றெய்சல், செய்தி ஆசிரியர் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் பேட்டி கண்டார்கள். பிறிதொரு நாள் வழக்குரைஞர் அருள்மொழியை பேட்டி கண்டார்கள். ஆசிரியர் வீரமணி ஏறத்தாழ 55 நிமிடங்களுக்கும் மேலாக பதிலளித்தார். அந்தப் பேட்டியிலிருந்து இரண்டு கேள்விகளுக்கான பதில்கள்.
சாரங்கபாணி எப்படி வீரமணியானார்?
கொள்கை வாரிசாக ஆனதால், சாரங்கபாணி, வீரமணியானேன் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி தான் என்னுடைய 10ஆவது வயதில் இந்தக் கொள்கையில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு கல்வி போதித்ததோடு சேர்த்து இந்தக் கொள்கையையும் போதித்தார். அப்படி வந்தபோது, இந்தக் கொள்கையில் பகுத்தறிவு உணர்வு, மொழி உணர்வு, பண்பாடு இவையெல்லாம் இயைந்து வந்த காரணத்தினால், சாரங்கபாணி என்ற என்னுடைய பெயரை வீரமணி என்று மாற்றினார். 1943ஆம் ஆண்டு கடலூரில், பொது மேடையில் ஏற்றிப் பேச வைத்தார்.
தமிழகத்தில் ஆணவக் கொலை?
Esta historia es de la edición May 11,2025 de Viduthalai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Viduthalai
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

