Intentar ORO - Gratis
முன்பணம்: முரண்டு பிடிக்கும் நாயகர்கள்
Tamil Murasu
|September 14, 2025
ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் விவகாரம் இது. முன்னணி நடிகர்கள், ஒரு படம் தோல்வி அடைந்தாலும்கூட, அடுத்த படத்துக்கு ஊதியத்தை உயர்த்திவிடுகிறார்கள். ஒருவேளை படம் வெற்றி அடைந்துவிட்டால், அவர்கள் கேட்கும் சம்பளம் மயக்கத்தைத்தான் வரவழைக்கும்.
தயாரிப்பாளர் சங்கம் பலமுறை ஊதியத்தைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்திய போதும், நம் நாயகர்கள் இறங்கி வந்தபாடில்லை.
ஒருபக்கம் நடிகர்களின் சம்பளமும் மற்றொரு பக்கம் தயாரிப்பாளரின் கடன் சுமையும் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் கோலிவுட்டின் உண்மை நிலவரம்.
பல தயாரிப்பாளர்கள் ஒன்றிரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த காரணத்தால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட சம்பவங்களைக் கோடம்பாக்கத்தில் சர்வ சாதாரணமாகக் கேட்க முடியும். சொந்த வீடு, கார், நிலபுலன்கள் என அனைத்தையும் விற்க வேண்டிய நெருக்கடி. அப்படியே விற்றாலும் மூச்சு முட்டும் அளவுக்குப் பின்தொடரும் கூடுதல் பிரச்சினைகள் என அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
'ஐ டோன்ட் கேர்' மனோபாவத்தில்தான் பெரும்பாலான நடிகர்கள் உள்ளனர். அதனால்தான் விஜய் சேதுபதி, விக்ரம், ரஜினி போன்ற சிலர் மட்டும் தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, மீதமுள்ள சம்பளத்தை விட்டுக் கொடுப்பது, ஒருவேளை முன்பே முழுத் தொகையை வாங்கியிருந்தால் அதைத் திருப்பிக் கொடுப்பது என்று உதவி செய்கிறார்கள்.
இதன் காரணமாகவே, சில தயாரிப்பாளர்கள் சில நடிகர்களைத் தெய்வத்துடன் ஒப்பிடுகிறார்கள்.
புது தயாரிப்பாளர், புது வழக்கு
நடிகர் ரவிமோகனை வைத்து படங்கள் தயாரிக்க, ரூ.6 கோடி முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தால் படம் தயாரிக்க முடியாமல் போக, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார்களாம்.
இங்குதான் ஒரு 'டுவிஸ்ட்'. முன்பணத்தைத் திருப்பித் தராததுடன், தமக்கு இழப்பீடாக ரூ.9 கோடி தரவேண்டும் என வழக்கு தொடுத்துவிட்டார் ரவிமோகன்.
அதை விசாரித்த நீதிபதி, ரவி மோகன் தரப்பிடம், "பேசாமல் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாமே. இல்லாவிட்டால் உங்கள் நற்பெயர் கெட்டுவிடாதா? உங்களைப் பற்றி எதிர்மறை கருத்தைத்தானே ஏற்படுத்தும்," என்று கேட்டார்.
Esta historia es de la edición September 14, 2025 de Tamil Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

