Facebook Pixel விடியலுக்கான ஒளியாய் விளங்கும் பெருமக்கள் | Tamil Murasu - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

விடியலுக்கான ஒளியாய் விளங்கும் பெருமக்கள்

Tamil Murasu

|

August 31, 2025

தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருதுகள் இவ்வாண்டு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிப் பிரிவுகளில் தலா இரு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.

- லாவண்யா வீரராகவன்

விடியலுக்கான ஒளியாய் விளங்கும் பெருமக்கள்

ஒருவருக்கு தேசிய கல்விக் கழக சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதும் மற்றொருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தாம் ரசித்த மொழியைப் பிறர் ரசிக்க விழையும் சரத்குமார்

உயர்நிலைப் பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சரத்குமார் கணசேகரன்.

தமிழ்ப் பயன்பாட்டின் தற்போதைய நிலைகுறித்த பதற்றமும் தாம் ரசித்துப் படித்த மொழியை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பும் தம்மை ஆசிரியராகத் தூண்டியதாகச் சொன்னார் இவ்வாண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்ற சரத்குமார் கணசேகரன், 31.

"கதைப் புத்தகங்களும் அவற்றில் எழுத்தப்பட்டுள்ள நுணுக்கமான உருவங்களும் என்னைத் தமிழ் மொழியின்பால் ஈர்த்தன. அவற்றை இப்போதைய தலைமுறையினர் பார்க்கும் விதம் எனக்கு வியப்பளிக்கிறது," என்ற திரு சரத், சிறு சிறு அழகியல் கூறுகள்மூலம் மொழி மீதான ரசிப்பை மாணவர்களிடம் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், உயர்நிலைப் பள்ளிப் பிரிவில், 2025க்கான நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

வீடுகளில் தமிழில் பேசும் பழக்கம் குறைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்த இவர், பயன்முறைக் கற்றல் திட்டம், மெய்நிகர்த் தொழில்நுட்பம் இரண்டையும் திறம்பட பயன்படுத்தி தமிழ்மொழிப் பாடம் கற்பித்து வருவதாகவும் சொன்னார். கடந்த ஆண்டு மின்னிலக்கக் கல்வியறிவுத் திறன்கள் குறித்த இணையவழி வகுப்புகளையும் இவர் வழிநடத்தினார்.

"விருது பெற்றவர்களிலேயே இளையவர் என்பது கனவுபோல் உள்ளது. அதனை நனவாக்க, என் திறன்களை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி," என்றார் திரு சரத்.

மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உழைப்பவர்

உயர்நிலைப் பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் இராமசாமி ஸ்டாலின்.

MÁS HISTORIAS DE Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size