Intentar ORO - Gratis
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!
Dinamani Villupuram
|July 03, 2025
வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.
கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிகல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Esta historia es de la edición July 03, 2025 de Dinamani Villupuram.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Villupuram
Dinamani Villupuram
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Villupuram
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Villupuram
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Villupuram
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Translate
Change font size
