Facebook Pixel முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு | Dinamani Vellore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

Dinamani Vellore

|

June 04, 2025

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர், ஜூன் 3: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி படத்துக்கு கைத்தறி அமைச்சரும், மாவட்டச் செயலருமான அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி, மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தர முர்த்தி, துணைச் செயலாளர்கள் குமுதா குமார், துரை மஸ்தான், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், ஜி.கே.குழும இயக்குநர் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூரில்... வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலரும், எம்.எல்.ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்து கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தி, திமுக கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கப்பட்டது.

இதில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலர் ஞானசேகரன், பகுதி செயலர்கள் கணேஷ் சங்கர், சுந்தர்விஜி, திமுகவினர் பங்கேற்றனர்.

மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார், அவைத்தலைவர் முகமது சகி, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், மண்டலக்குழு தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் தலைமை வகித்தார். பகுதி செயலர்கள் வன்னியராஜா, பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

MÁS HISTORIAS DE Dinamani Vellore

Dinamani Vellore

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Vellore

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Vellore

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளிடையே மோதல்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலர் இரா. பசுபதி, முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் அணியினரிடையே மோதல் எழும் சூழல் நிலவியதால், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

time to read

1 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size