Intentar ORO - Gratis

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழப்பு: 6 போலீஸார் பணியிடை நீக்கம்

Dinamani Tiruvarur

|

June 30, 2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்ததையடுத்து, 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

சிவகங்கை/மானாமதுரை, ஜூன் 29:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா (41) தனது தாயுடன் வெள்ளிக்கிழமை மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்தார். பின்னர், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித்குமாரிடம் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தும்படி நிகிதா கூறினார். அதற்கு அஜித்குமார் தனக்கு கார் ஓட்டத் தெரியாது எனக் கூறி, வேறு ஒருவரை காரை இயக்கச் சொல்லி ஓரமாக நிறுத்தினாராம்.

இதனிடையே, சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நிகிதா தனது காரில் வைத்திருந்த ஒன்பதுரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்துச் சென்று விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்துவிட்டனர். விசாரணையின் போது, அஜித்குமாரை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸார் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் உயிரிழந்தார்.

MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Tiruvarur

வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Translate

Share

-
+

Change font size