Intentar ORO - Gratis
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
Dinamani Tiruchy
|January 03, 2026
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
-
நாட்டில் அவசர நிலை பிரகடனத்தின்போது அதை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும், இலக்கியமும், அச்சமில்லாமல் கருத்து தெரிவிப்பதும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
படைப்பாளிகளுக்கு விருதுகள்:
சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்பு எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான விருதுகளுக்கு தேர்வான கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த புனைவுப் பிரிவில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுபிதாபாவுக்கும் (நூல்: டேல்ஸ் ஃபிரம் தி டான்லிட் மவுன்ட்டன்ஸ்), அபுனைவு பிரிவில் எழுத்தாளர் சுதீப் சக்கரவர்த்திக்கும் (நூல்: ஃ பாலன் சிட்டி), அறிமுக எழுத்தாளர் நேஹா தீக்ஷித்துக்கும் (நூல்: தி மெனி லைவ்ஸ் ஆஃப் சயீதா எக்ஸ்) விருதுகளையும், பரிசுத் தொகையையும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்த்திய உரை: சமூகத்துக்கான உயரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ராம்நாத் கோயங்கா. பத்திரிகையை அறிவுசார் துணிச்சலுக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அவர் பயன்படுத்தினார்.
சிந்தனைச் சுதந்திரம் மூலம் துணிச்சலையும், உறுதியையும் நிலைநாட்ட முடியும் என்று அவர் நம்பினார்.
பொது வாழ்வில், மக்களின் கேள்விகளுக்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பொறுப்பேற்று உரிய பதிலளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஜனநாயக விழுமியங்களுக்காக தனது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். துணிச்சலாக பத்திரிகை நடத்தினார். இன்று துணிச்சலாக கருத்துகளை வெளியிட அவர்தான் காரணம்.
Esta historia es de la edición January 03, 2026 de Dinamani Tiruchy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Tiruchy
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
அரசு மருத்துவமனையில் கையூட்டு எம்எல்ஏ புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கையூட்டு பெற்ற 4 பணியாளர்கள் மீது, தொகுதி எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Tiruchy
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tiruchy
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Listen
Translate
Change font size
