Intentar ORO - Gratis
முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?
Dinamani Thanjavur
|June 08, 2025
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி நடந்த புத்தாண்டு சிறப்பு கட்சிப்பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அந்த மோதலை மேலும் தீவிரமாக்கியது.
வீட்டில் தனக்கும் கட்சியில் அன்புமணிக்கும் உதவியாக தனது மகள் வழிப் பேரனான ப.முகுந்தனை பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தபோது அதை மேடையிலேயே கடுமையாக எதிர்த்தார் அன்புமணி.
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை தானே ஏற்பதாகவும் அன்புமணி இனி செயல் தலைவராகவும், ஜி.கே.மணி கௌரவத் தலைவராகவும் இருப்பார் என்றும் அறிவித்தார் ராமதாஸ். இரு தலைவர்களும் தைலாபுரத்திலும் பனையூரிலும் தனித்தனியாக போட்டிக் கூட்டங்களை நடத்தினர்.
டாக்டர் ராமதாஸ், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தையும், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி கூட்டங்களை யும், தொடர்ந்து வன்னியர் சங்கம், சமூக ஊடக நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கூட்டங்களை நடத்தினார். அவற்றில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மே 29-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 'வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது' என்று அன்புமணியை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். 35 வயதில் அன்புமணியை மத்திய கேபினட் அமைச்சராக்கி தவறு செய்தேன். மத்திய அமைச்சரவையில் அவருக்காக கடுமையாகப் போராடி சுகாதாரத் துறை கிடைக்கச் செய்தேன் என்றும் கூறினார்.
மேலும், ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தபோது, கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க சென்றபோது தனக்கு அன்புமணி விதித்த கட்டுப்பாடுகள், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேரத் தயாராக இருந்தபோது, பாஜக அணியில் சேர நிர்பந்தித்தார் அன்புமணி என்று புகார்களை அடுக்கினார் ராமதாஸ்.
Esta historia es de la edición June 08, 2025 de Dinamani Thanjavur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thanjavur
Dinamani Thanjavur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Thanjavur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Thanjavur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Thanjavur
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Translate
Change font size

