Facebook Pixel வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- ஒரு மக்கள் பணி | Dinamani Tenkasi - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- ஒரு மக்கள் பணி

Dinamani Tenkasi

|

December 09, 2025

எனது பள்ளிப் பருவம் முதல் சுமார் 10 ஆண்டுகள், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தீவிர தொண்டன் என்ற முறையில், எனக்கு, வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (எஸ்ஐஆர்) மீதான அண்மைக் கால விவாதம் நகைச்சுவையாக உள்ளது.

- எஸ்.குருமூர்த்தி

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- ஒரு மக்கள் பணி

தற்போது எஸ்ஐஆர் என்று அழைக்கப்படும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, அரசியல் தொண்டனாக நான் பணியாற்றிய போது, கட்சி ஊழியர்களின் வழக்கமான தேர்தல் செயல்பாடாகவே இருந்தது. கடந்த 1960-களிலிருந்து நான் வசிக்கும் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அந்தப் பகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த எனது சட்ட ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, நானும் இதர தொண்டர்களும் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுக்கும், குடிசைக்கும் நேரில் செல்வது வழக்கமாக இருந்தது. எங்கள் கைகளில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வைத்து அதில் இருப்பவர்கள் காலமாகி இருந்தாலும், புதிதாக குடி வந்திருந்தாலும், வேறு இடத்துக்கு மாற்றலாகி இருந்தாலும் கட்சியின் தலைமையின் வாயிலாக எழுத்துபூர்வமாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்போம்.

புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, உயிரிழந்த அல்லது வேறு இடங்களுக்கு மாற்றலான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது போன்ற பணிகளில் நாங்கள் உதவுவோம். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் எஸ்ஐஆர் அணியாக நாங்கள் செயல்பட்டோம். திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தியதால், எஸ்ஐஆர் பணிகளில் திறம்படச் செயல்பட்டார்கள்.

இன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ளும் பணியை அன்று கட்சித் தொண்டர்கள் செய்தனர். வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து பணியாற்றின. இதை மற்ற கட்சிகளின் எஸ்ஐஆர் அணியும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று மயிலாப்பூர் வீதிகளில் நான் நடந்து செல்கையில், ஒரு சில வீடுகளுக்குச் சென்றிருந்த தருணத்தை இன்னும் நினைவுகூர்கிறேன். அந்தக் காலத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பணியாக தாங்களும் எஸ்ஐஆர் நடைமுறையில் ஈடுபட்டு வந்தோம் என்பதை அறியாமல் இருப்பதை, தற்போது எஸ்ஐஆர் குறித்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய விவாதம் அம்பலப்படுத்துகிறது.

MÁS HISTORIAS DE Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Tenkasi

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Tenkasi

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்

'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size