Facebook Pixel ஒரு மனிதன்... ஓர் இயக்கம்... | Dinamani Salem - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஒரு மனிதன்... ஓர் இயக்கம்...

Dinamani Salem

|

July 23, 2025

எனது மதம் பாரதீயம்' என்றும், என்னுடைய மதத்தின் தேவதை பாரத மாதா' என்றும், 'தீண்டாமை வெறுக்கத்தக்க பாவமாகவும், இந்திய சமூகத்துக்கே களங்கமாகவும் உள்ளது' என்றும் பிரகடனப்படுத்தியவர் சிவா.

- த. ஸ்டாலின் குணசேகரன்

லகங்காதர திலகர், விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகிய மூவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க கால மும்மூர்த்திகள் என வரலாற்றாளர்களால் வரையறுக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழ் மண்ணில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோர் திலகர் சகாப்தத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்கினர்.

இன்று வீரமுரசு சுப்பிரமணிய சிவா மறைந்த நூற்றாண்டு நிறைவு நாள். அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், வத்தலகுண்டில் 1884-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி பிறந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தான் அமைத்திருந்த பாரதாஸ்ரமத்தில் 1925-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி மறைந்தார் சிவா. அப்போது, அவருக்கு வயது 41.

1900-ஆம் ஆண்டு கோவையில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பதினாறு வயது. திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை.

1902-இல் இருந்து சில காலம் திருவனந்தபுரத்தில் இருந்தார். இவர் ஒரு சராசரி இளைஞராக விளங்கவில்லை. எந்நேரமும் இவரைச் சுற்றி பத்து இளைஞர்கள் இருந்து கொண்டே இருப்பர்.

1906-இல் சிவா ஆர்ய சமாஜ தொண்டர் தாகூர்கான் சந்திரவர்மா என்பவரின் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். அவரிடம் இயல்பாகவே அமை யப் பெற்ற அரசியல் உணர்வை தாகூர் கான் உரை தூண்டிவிட்டது.

வங்கப் பிரிவினை, ஆங்கிலேயர் சூழ்ச்சி, சுதேசி இயக்க வளர்ச்சி, காங்கிரஸின் சுயராஜ்ய தீர்மானம், நாவலர் விபின் சந்திர பாலரின் கனல் தெறிக்கும் உரைகள், லாலா லஜபதி ராய்-அஜீத் சிங் நாடு கடத்தல் ஆகிய அரசியல் நிகழ்வுகள் சிவாவின் சிந்தனையில் பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்த தீவிரச் செயல்பாட்டில் நாட்டமும், ஈடுபாடும்மிக்க வித்தியாசமான இளைஞராக வளர்ந்தார் சிவா.

'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற இளைஞர் அமைப்பை திருவனந்தபுரத்தில் நிறுவினார். இளைஞர்கள் பலரை இவ்வமைப்பில் இணைத்து அவர்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார்.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Salem

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Salem

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Salem

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Salem

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Salem

உதிரிபாக விநியோக நிறுவன தீ விபத்து: உற்பத்தி ஜூன் 22-க்குள் சீராகும்

சென்னை அருகே உள்ள தனது முக்கிய உதிரிபாகங்கள் விநியோக நிறுவனமான 'மோபிஸ் இந்தியா' ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட உற்பத்தி, வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் முழுமையாகச் சீரடையும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Salem

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Salem

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size