Intentar ORO - Gratis

கனவு நனவாகும் தருணம்!

Dinamani Salem

|

July 17, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து சோதனைகளை நடத்திவிட்டு இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரர்களும், வீராங்கனையும் 'டிராகன் கிரேஸ்' விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

20 நாள்களுக்குப் பின், மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கும் அவர்களது பயணம் மனித இனத்தைத் தலைநிமிர வைத்திருக்கிறது.

பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது சர்வதேச விண்வெளி நிலையம். ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அந்த விண்வெளி நிலையத்துக்குச் சென்று அந்த விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து மீண்டும் திரும்பியிருக்கும் 4 வீரர்களும் 310-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்துள்ளனர். மொத்தம் 1.3 கோடி கி.மீ. விண்வெளியில் பயணம் செய்துள்ளனர்.

18 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நால்வரும், உயிரி மருத்துவ அறிவியல், நரம்பு அறிவியல், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை அங்கே மேற்கொண்டனர். இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சுபான்ஷு சுக்லாவும் இஸ்ரோவின் சார்பில் சில ஆய்வுகளை மேற்கொண்டார். திசு மறு உருவாக்கம், விதை முளைப்பு, நீலப் பசும்பாசி வளர்ப்பு, கதிரியக்க விளைவுகள், மனித உடல் இயக்கம், மிதக்கும் நீர்க்குமிழி உள்பட நுண்ஈர்ப்பு விசை சார்ந்த 7 முக்கிய ஆய்வுகளை சுக்லா விண்வெளியில் மேற்கொண்டார். அங்கு முளைவிட்ட பச்சைப் பயறு, வெந்தயம் ஆகியவை இந்திய விஞ்ஞானிகளால் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Salem

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்

நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Salem

Dinamani Salem

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Salem

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Salem

மீண்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தைகள்

புவி சார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி உயர்வு அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 08, 2026

Dinamani Salem

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Salem

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Salem

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size