Facebook Pixel வக்ஃப் திருத்த மசோதா: சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் | Dinamani Salem - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

வக்ஃப் திருத்த மசோதா: சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும்

Dinamani Salem

|

April 04, 2025

சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் பாஜக வியூகத்தின் ஓர் அங்கமே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை சாடினார்.

புது தில்லி, ஏப். 3:

மோடி அரசு நாட்டை படுகுழிக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பழைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், வக்ஃப் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்து சோனியா காந்தி பேசியதாவது:

மக்களவையில் கடந்த புதன்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ‘பலவந்தமாக’ நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டமும் அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாகும். இதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதோடு, பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற காங்கிரஸின் கோரிக்கையை மத்திய அரசு உள்நோக்கத்துடன் புறக்கணித்து வருகிறது.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்பு

அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலர்கள், மகளிரணி இணைச்செயலர் என மொத்தம் 4 பேர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Salem

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Salem

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

தென்னாப்பிரிக்காவுக்கு 'ஹாட்ரிக்'

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Translate

Share

-
+

Change font size