Intentar ORO - Gratis
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
Dinamani Pudukkottai
|October 12, 2025
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.Esta historia es de la edición October 12, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
October 15, 2025

Dinamani Pudukkottai
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் 'டிரா'
ஜூனியர்களுக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 3-3 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.
1 min
October 15, 2025
Dinamani Pudukkottai
பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை
அமித் ஷா
1 mins
October 15, 2025

Dinamani Pudukkottai
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதல்வர் தொடங்கி வைத்தார்
1 mins
October 15, 2025
Dinamani Pudukkottai
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1 min
October 15, 2025

Dinamani Pudukkottai
பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 10-ஆம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
October 15, 2025
Dinamani Pudukkottai
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
1 min
October 14, 2025
Dinamani Pudukkottai
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Pudukkottai
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Pudukkottai
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Translate
Change font size